மும்பை: ஏர் ஏசியா, ஸ்பைஸ் ஜெட், விஸ்த்தரா, ஜெட் ஏர்வேஸ் என போட்டி நிறுவனங்கள் அனைத்தும் சலுகை விலையில் விமான கட்டணம் அறிவித்து வரும் நிலையில் இப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் அதில் இனைந்து கொண்டுள்ளது.

குறைந்த விலையில் விமான பயணம் அளித்து வரும் இண்டிகோ நிறுவனம் விழாக்கால சலுகையாக 888 ரூபாய் கட்டணத்தில் உள்நாட்டு ஒரு வழிப் பயண கட்டணத்தை அறிவித்துள்ளது.
இண்டிகோவின் சலுகை விலையில் அக்டோபர் 8 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்து 2017 ஏப்ரல் 13 வரை பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் சலுகை விலையில் எத்தனை டிக்கெட்கள் கிடைக்கும் என்று ஏதும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த டிக்கெட்களை ரத்து செய்தால் பணம் திருப்பி அளிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் டெல்லி முதல் ஜெய்பூர் வரை செல்ல 888 ரூபாய் கட்டணம் என்று முடிவுசெய்துள்ளது.
டெல்லியில் இருந்து மும்பை செல்ல இப்போது 5,642 ரூபாயாக உள்ள டிக்கெட் கட்டணத்தை ஆஃபர் விலையில் 2,152 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க:
சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!


Click it and Unblock the Notifications