ஐஆர்சிடிசி அளிக்கும் தீபாவளி ஆஃபர்..?

தீபாபளி ஆஃபராக ரயில் பயணிகள் வியாழக்கிழமை முதல் ஒரு பைசா செலவில் பயண இசூரன்ஸ் பெற்று பயணம் செய்யலாம்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்த ரயில் பயண இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெற 92 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும் என்று இருந்தது. அதுவே இப்போது அக்டோபர் 7 முதல் 1 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது.

குறைந்த கால சலுகை

குறைந்த கால சலுகை

இந்தச் சலுகை விலை குறைந்த காலத்திற்கே மட்டுமே என்று அறிவித்த ஐஆர்சிடிசி நிறுவனம் 2016 அக்டோபர் 31 ஆம் டேதி வரை பயணிகள் புக் செய்யும் டிக்கெட்களுக்கு ஒரு பைசா சலுகை விலையில் டிக்கெட் பெற முடியும் என்று அறிவித்துள்ளது.

இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை

இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை

2016 அக்டோபர் 6 ஆம் தேதி காலை எட்டு மணி வரை பயணிகள் இன்சூரன்ஸ் திட்டத்தை 1,20,87,625 பேர் தேர்வு செய்துள்ளதாக ஐஆர்சிடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஏ கே மனோசா தெரிவித்தார்.

இணையதள டிக்கெட் புக்கிங்களுக்கு மட்டுமே

இணையதள டிக்கெட் புக்கிங்களுக்கு மட்டுமே

சென்ற ரயில்வே பட்ஜெட் உரையின் போது இத்திட்டத்தைப் பற்றி அறிவித்த ரயில்வே அமைச்ச சுரேஷ் பிரபு இது ட்க்கெட் முக் செய்யும் போது வழங்கப்படும் கூடுதல் சேவையே, தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய முறை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களைத் தவிர்த்து அனைவருக்கும் யாரெல்லாம் இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்து சரியான வகுப்பில் பயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காப்பீட்டின் பயன்

காப்பீட்டின் பயன்

ரயில் பயணங்களின் போது ஏதேனும் பயங்கரவாத தாக்குதல், வழிப்பறி, கலகத்தை, துப்பாக்கிச் சூடு அல்லது தீ வைப்பு உட்பட அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது மரணம் அல்லது எழுந்திருக்க முடியாத அளவு ஊனம் ஏற்படும் போது ரூ.10 லட்சமும், உடலின் ஏதேனும் பாகத்திற்கு ஊனம் நேர்ந்தால் ரூ.7.5 லட்சமும், 2 லட்சம் வரை மருத்துவ செலவுகள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்குப் போக்குவரத்து செலவாக ரூ. 10,000 காப்பீடாக வழங்கப்படும்.

டிக்கெட் ரத்து செய்தல்

டிக்கெட் ரத்து செய்தல்

டிக்கெட் ரத்து செய்யும் போது காப்பீட்டிற்கான ப்ரீமியம் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

மூன்று நிறுவனங்கள் தேர்வு

மூன்று நிறுவனங்கள் தேர்வு

இதற்காக 19 நிறுவனங்களிடம் இருந்து ஏலம் நடத்தி ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் என மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களிடம் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய செயல்பாட்டைப் பொருத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும் கூரப்படுகிறது.

 

கட்டாயம் அல்ல

கட்டாயம் அல்ல

எனினும் இது பயணிகளின் விருப்பத் தேர்வே கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக தற்போது 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட் பஸ்

ரெட் பஸ்

இதேப் போன்று தனியார் ரெட் பஸ் டிக்கெட் நிறுவனமும் பயணிகளுக்கான விருப்ப காப்பிட்டு சேவையை ரூ.10-க்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+