சென்னை: இந்தியர்கள் பெரும்பாலும் பொதுத்துறை வங்கிகளே பாதுகாப்பு எனக் கருதுவர். ஆனால் பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளில் சேவை குறைபாடுகள் போன்றவை உள்ளதால் தனியார் துறை வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகளை விடத் தனியார் துறை வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை வாங்குவதும் எளிமை ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் பல தனியார் நிறுவனங்களிலும் தங்களது பணியாளர்களுக்குத் தனியார் வங்கிகளின் உதவியுடன் தான் சம்பள கணக்கை அளித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதள வாசகர்களிடம் சிறந்த தனியார் வங்கிகள் எவை என்று ஐந்து வங்கிகளைத் தேர்வு செய்து கேள்வியை வைத்து இருந்தோம். அந்த சர்வேயில் பங்கேற்ற வாக்களித்த 2598 பேரின் முடிவு என்ன என்பதை நாம் இங்குப் பார்ப்போம்.
எச்டிஎஃப்சி வங்கி
வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கி சேவையை அளிக்கும் தனியார் வங்கியாக இந்தியாவில் இரண்டாம் மிகப்பெரிய வங்கியான எச்டிஎஃப்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வேயில் வாக்களித்து உள்ள 2598 பேரில் 956 பேர் எச்டிஎஃப்சி வங்கியைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் 37 சதவீதத்துடன் முதல் இடத்தை இந்த வங்கி பிடித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கி சேவையை அளிக்கும் இரண்டாவது தனியார் வங்கியாக இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வேயில் வாக்களித்து உள்ள 2598 பேரில் 887 பேர் ஐசிஐசிஐ வங்கியைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் 34 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தை இந்த வங்கி பிடித்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கி
வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வங்கி சேவையை அளிக்கும் மூன்றாவது தனியார் வங்கியாக ஆக்ஸிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வேயில் வாக்களித்து உள்ள 2598 பேரில் 517 பேர் ஆக்ஸிஸ் வங்கியைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் 20 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தை இந்த வங்கி பிடித்துள்ளது.
கோடக் மகேந்திரா
மும்பையைத் தலைமை இடமாகச் செயல்பட்டு வரும் கோடக் மகேந்திரா வங்கிக்கும் 2598 பேரில் 5 சதவீதம் அதாவது 134 நபர்கள் வாக்களித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
யெஸ் பேங்க்
இந்தியாவில் ஐந்தாவது மிகப் பெரிய வங்கியாக உள்ள யெஸ் வங்கியிற்கு நமது சர்வேயில் 4 சதவீதத்தினர் அதாவது 110 வோட்டுகள் அளித்து ஐந்தாவதாகத் தேர்வு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications