ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீட்டுக் கடன் மீதான வட்டியை வங்கி எவ்வளவு குறைத்துள்ளன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கி அன்மையில் ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவித்ததை அடுத்து கடன் மீதான வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 
ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்ததை அடுத்து வீட்டுக் கடன் மீதான வட்டியை வங்கி  எவ்வளவு குறைத்துள்ளன..?

சில வங்கிகள் மட்டும் இப்போதைக்கு ஆர்பிஐயின் அறிவிப்புக்கு அடுத்து வட்டியைக் குறைத்துள்ளனர்.

எனவே நாம் இப்போது எந்த வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர்களுக்கான வட்டியைக் குறைத்து உள்ளன என்று இங்குப் பார்ப்போம்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான கடன் மீதான வட்டியில் 5 புள்ளிகள் வரை குறைத்து உள்ளது.

ஒரு வருடக் கடனுக்கு 9.05சதவீதம் எனவும், ஒன்று மற்றும் 3 மாத காலம் போன்ற கடன்களுக்கு 8.85 சதவீதமாக வட்டியாக அக்டோபர் 1 முதல் ஐசிஐசிஐ வங்கி அமைத்துள்ளது.

 

கோடாக் மகேந்திரா வங்கி

கோடாக் மகேந்திரா வங்கி

ஆர்பிஐ 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து கோடாக் மகேந்திரா வங்கி 0.1 சதவீதம் வட்டியைக் குறைத்துள்ளது.

எனவே 9.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 9.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

கனரா வங்கி
 

கனரா வங்கி

அக்டோபர் 11 முதல் இப்போது 9.65 சதவீதமாக உள்ள வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து 9.60 சதவீதமாக அளிக்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைத்ததை அடுத்து வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவீதமாக இந்தியன் வங்கி குறைத்துள்ளது. இதனால் அக்டோபர் 7 முதல் 9.45 சதவீதமாக இருந்த வட்டி 9.55 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளனர்.

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி பல திட்டங்களில் 0.35 சதவீதம் வரை வட்டி விகிதத்தைக் குறைத்து உள்ளது.

ஓரியண்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

ஓரியண்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்

ஆர்பிஐ ரெப்போ விதத்தைக் குறைத்த ஒன்று இரண்டு நாட்களில் 0.15 சதவீதம் வரை ஓரியண்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் குறைத்துள்ளது.

யூனைடட் பேங்க் ஆப் இந்தியா

யூனைடட் பேங்க் ஆப் இந்தியா

ஒரு வருடத்திற்கான கடன் திட்டங்களில் 9.45 சதவீதமாக இருந்து வட்டி விகிதத்தை ஆர்பிஐயின் அறிவிப்பைத் தொடர்ந்து 9.40 சதவீதமாகவும், 6 மாத கடன் திட்டங்களுக்கு 9.40 சதவீதத்தில் இருந்து 9.35 சதவீதமாக யூனைடட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Banks That Cut Interest Rates After RBI's Repo Rate Cut

Recently, the Reserve Bank of India cut repo rates by 25 basis points, which was in line with expectations. The rates have been slashed to 6.25 per cent. Some banks have reduced interest rates after RBI pushed the banks to pass the rate cut to customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X