துபாய்: இந்தியாவைச் சேர்ந்து தொழில் அதிபரான பல்வந்தர் சாஹானி 33 மில்லியன் டிராம்கள் அதாவது 9 மில்லியன் டாலர் கொடுத்து தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நம்பர் பிளேட்டினை வாங்கி உள்ளார்.

துபாய் அரசால் சனிக்கிழமை டி5(D5) என்ற நம்பர் பிளேட் எண்ணுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிராப்ரட்டி மேனேஜ்மெண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இதேப் போன்று 1 மில்லியன் டிராம்கள் கொடுத்து ஒரு எண்ணையும் வாங்கி உள்ளார்.
ஒருவருடத்திற்கு மும்பு இதேப் போன்று 25 மில்லியன் டிராம்கள் கொடுத்து 09 என்ற எண்ணை இவர் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைசன்ஸ் நம்பர் பிளேட் ஏலம் துபாயில் மிகவும் பெர் போன ஏலத்தில் ஒன்று. இது போன்று நம்பர் பிளெட்டுகள் வாங்குவது ஒரு ஆடம்பரமாகப் பார்க்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு சயித் அல் கஹோரி என்பவர் 52.2 மில்லியன் டிராம்கள் கொடுத்து 1 லைசன்ஸ் பிளேட் வாங்கியதே சாதனையாக உள்ளது.
சனிக்கிழமை மட்டும் 80 நம்பர் பிளேட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் வந்த லாபத்தை துபாயின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications