மும்பை: குவால்காம் நிறுவனத்தின் இந்திய தலைவர் சுனில் லால்வானி நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த அதிகப்படியான செயல்திறன் மன அழுத்தங்களால் வேலை விட்டு வெளியேறினார் என்று கூறுகின்றனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஜூலை மாதம் 21 ஆண்டுகளாக நிறுவனத்தின் தலைவராக இருந்த அவீனிஷ் அகர்வாஅல் விடுவிக்கப்பட்டு லாலவானி தலைவர் பொறுப்பை ஏற்றார்.
குவால்காம் உறுதி
லால்வானியின் முடிவு குறித்து குவால்காம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அதை உறுதி செய்த நிறுவனம் தானாகவே அவர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியதாகவும், அவருக்கான மாற்றும் நபர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இந்த இடைப்பட்ட காலத்திற்கு பராக் கார், அரசு அலுவல்கள் துணை தலைவரான இவர் இந்திய பிரிவின் தலைமை பொறுப்பை கவனிப்பார் என்றும் தெரிவித்தனர்.
சுனில் லால்வானி
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த லால்வானி குவால்கான் உலகளவிலும், இந்தியாவிலும் பெறும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்த நிலையில் இந்த பொறுப்பிற்கு வந்தார்.
பணிப்புரிந்த நிறுவனங்கள்
குவால்காம் நிறுவனத்தில் பணியை தொடர்வதற்கு முன்பு பிளாக்பெர்ரி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
அதுமட்டும் இல்லாமல் ஈஎம்சி கார்ப், நோக்கியா கார்ப், சிஸ்கோ போன்ற நிறுவனங்களிலும் இவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க மறுப்பு
லால்வானியிடம் இதைப் பற்றி பேசத் தொடர்பு கொண்ட போது அவர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications