ஹைத்ராபாத்: மக்கள் மற்றும் அரசுக்கு இடையில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அந்திர பிரதேச மாநிலம் இரண்டாக உடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டத்து. இப்பிரிவினையின் போதும் தெலுங்கானா மாநிலத்தில் 10 மாவட்டங்களும் ஆந்திர பிரதேசத்தில் 13 மாவட்டங்களும் இருந்தன.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலத்திற்கு இணையாக வருவாய் மற்றும் வர்த்தக்தை அதிகரிக்கும் நோக்கில் 10 மாவட்டங்களை 31 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் புதிய 21 மாவட்டங்கள் மாவட்டங்கள தெலுங்கானாவின் உருவாகியுள்ளது.
மாநிலங்களின் வருவாய்
2015-2016 நிதி ஆண்டில் ஆந்திர பிரதேசம் 90,122.58 கோடி வருவாய் பெற்றுள்ள நிலையில், தெலுங்கானாவோ 88,550 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகப் பெற்று உள்ளது.
31 மாவட்டங்களுக்கான காரணம்
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான பணியில் ஈடுபட்டு வந்த தெலுங்கானா அரசு நிர்வாகங்கள் முதலில் 17 மாவட்டங்களைத் தயார் செய்தது. ஆனால் மாநில அரசு மேலும் 4 மாவட்டங்களைச் சேர்க்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்வால், ஜனகாவ், சிரசில்லா மற்றும் அசிஃபாபாத் போன்ற புதிய மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தெலுங்கானா அரசு அறிவிப்பு
இதற்காகத் திங்கட்கிழமை இரவு தெலுங்கானா அரசு முறையான அறிவிப்பை வெளியிட்டது அதில் புதிய மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மற்றும் பிற அரசு ஊழியர்கள் போன்றவற்றையும் அறிவித்தனர்.
வளர்ச்சி பணிகள்
புதிய மாவட்டங்கள் உருவாக்குவதன் மூலம் வளர்ச்சி பணிகளில் அரசு நிர்வாகங்கள் செயல்பட மிகவும் எளிமையாக இருக்கும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் கேசிஆர் கூறினார்.
இதுமட்டும் அல்லாமல் பல இடங்களில் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகவும் இது வழிவகை செய்யும்.
தெலுங்கானா அரசு அலுவலகங்கள்
இந்த புதிய மாவட்டங்கள் முழுவதுமாக உருவாகும் போது 25 புதிய வருவாய் பிரிவுகள், 125 புதிய புதிய மண்டலங்கள், 4 புதிய காவல் துறை ஆணையங்கள், 23 புதிய துணை காவல் நிலையங்கள், 28 புதிய காவல் துறை வட்டங்கள் மற்றும் 91 புதிய காவல் துறை நிலையங்கள் உருவாக வாய்ப்பு உள்ளன.
சபாஷ் சரியான போட்டி..
அடுத்த சில வருடங்களில் வர்த்தகம் மற்றும் வருவாய் ரீதியாக பல போட்டிகள் இரு மாநிலங்கள் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மத்தியில் இருந்து நகரபுற வளர்ச்சி, வீட்டு மனை வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பக்க பலமாக இருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications