மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-க்கு உச்ச நீதி மன்றத்திடம் இருந்து லோத்தா குழு அளித்த பரிந்துரைகள் படி நடத்த வேண்டும் என்பதில் அழுத்தம் தெரிவித்துள்ள நிலையில் இப்போட்டியில் அதிகம் வருவாய் அளிக்கும் ஊடக உரிமைகளுக்கும் ஒரு பக்கம் போட்டி நிலவி வருகிறது.
ஐபிஎல் போட்டியை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு 2018-2027 வரை ஒலிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த கோரலுக்கு பெரும் போட்டி நிலவி வருகிறது.
போட்டி
இந்தப் போட்டியில் ஸ்டார் இந்தியா நிறுவனமும், தற்போது ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள சோனி பிச்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவிற்கு இடையிலும் பெறும் போட்டி நிலவி வருகிறது.
விண்ணப்பங்கள்
ஐபிஎல் போட்டியை ஒலிபரப்புவதற்காக இது வரை 16 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், ஸ்டார் அல்லது சோனி இரு நிறுவனங்களில் யாரேனும் ஒருவருக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமை இரண்டு நிறுவனங்களும் பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் டிஜிட்டல் ஒலிபரப்பு முறையில் இன்னும் பெறும் போட்டி நிலவி வருகிறது.
டிஜிட்டல் முறை
அமேசான் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டைம்ஸ் இண்டெர்னெட் போன்றவர்கள் டிஜிட்டல் ஒளிபரப்பு முறையில் பெறும் போட்டியாளர்களாக உள்ளனர்.
வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமை
ஈஎஸ்பிஎன் நிறுவனம் அமெரிக்க ஒளிபரப்பு உரிமைக்கும், ஸ்கை மற்றும் பிடி குழுமம் ஐரோப்பாவில் ஒளிபரப்புவதற்கான உரிமைக்கு ஏலத்தில் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அல் ஜஷீரா மீடியா நெட்வொர்க்கின் பீன் மீடியா நிறுவனம் இப்போது ஒளிபரப்பு உரிமை வைத்துள்ள ஓஎஸ்என் நிறுவனத்துடன் போட்டியில் குதித்துள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் எக்கோனெட் வயர்லெஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.
நிபுணர்கள் கருத்து
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளுக்கான போட்டியை பற்றிக் கூறியுள்ள நிபுணர்கள் இந்த முறை இந்திய ஒளிபரப்பு உரிமை மட்டும் 20,000 கோடி ரூபாய் முதல் 27,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறுகின்றனர். இது 30,000 கோடி வரை கூட போகலாம் என்றும் போட்டி அதிகரிக்கும் போது இன்னும் அதிகமாகவும் போகலாம் என்று கூறுகின்றனர்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications