டெல்லி: இண்டிகோ விமான நிறுவனம் குறிப்பிட்ட சில உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் 834 ரூபாய்க்கு விளம்பர சலுகை கட்டணத்தில் டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது.
சலுகை காலம்
இந்த சலுகை விலை கட்டணத்தில் அக்டோபர் 30 முதல் 2017 ஏப்ரல் 13 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களை அக்டோபர் 17 வரை புக் செய்ய இயலும் என்று அறிவித்துள்ளது.
டெல்லி முதல் ஜெய்ப்பூர்
விமான டிக்கெட்கள் தேவைக்கு ஏற்ப விலைகள் மாற்றி அமைக்கப்படும். இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் டெல்லி முதல் ஜெய்ப்பூர் செல்வதற்கான டிக்கெட் 867 ரூபாய் முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெக்கெட் ரத்து செய்தால்
இண்டிகோ நிறுவனம் இது பற்றி தெரிவிக்கையில் இந்த டிக்கெட் கட்டணங்கள் ரத்து செய்யப்படும் போது திருப்பி அளிக்கப்படாது என்றும் சட்ட ரீதியான வரி மட்டுமே திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் இருந்து மும்பை
மேலும் இண்டிகோ இணையதளத்தில் பார்த்த போது டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்கான டிக்கெட் கட்டணம் எப்போதும் 5,600 ரூபாயாக இருக்கும். ஆனால் நவம்பர் மாதம் பயணம் செய்ய 2,030 ரூபாய் ஆக உள்ளது.
அதே நேரம் இண்டிகோ நிறுவனம் எத்தனை டிக்கெட்கள் இந்தச் சலுகை விலையில் கிடைக்கும் என்று எதையும் தெரிவிக்கவில்லை.
47 புதிய விமானங்கள்
விழாக்கால நெரிசலைத் தவிர்க்க 47 புதிய விமானங்களைக் கூடுதலாக இயக்க இருப்பதாக இண்டிகோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிற விமான நிறுவனங்கள்
இது போன்று பல தனியார் விமான நிறுவனங்களும் தங்களது விமான சேவையில் சலுகைகளை வழங்கி வருகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 25 சதவீதம் வரை கட்டணத்தில் சலுகை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விமான பயண சேவைகள் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் இது போன்ற சலுகைகள் இன்னும் வலுசேர்த்து வருகின்றது.


Click it and Unblock the Notifications