மும்பை: இந்திய பங்குச் சந்தை மற்றும் நாணய சந்தை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை துவங்கியது. சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு காரணங்களுக்காக சீன சந்தை இன்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு இரண்டு வாரங்களாக இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவாக 0.4 சதவீதம் குறைந்தது.
இன்று காலை 11:17 மணி நேரத்தின் படி சென்செக்ஸ் 267 புள்ளிகள் குறைந்து 27,815 புள்ளிகளுடனும், நிஃப்டி 85 புள்ளிகள் குறைந்து 8,623 புள்ளிகளுடனும் வர்த்தகம் ஆகி வருகிறது.
டிசிஎஸ் இன்று தனது இரண்டாவது காலாண்டு அறிக்கை அறிவிக்க உள்ள நிலையில் பங்குகளின் விலை 1.8 சதவீதம் குறைந்து காணப்படுகிறது.
அதே நேரம் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்துள்ளது, அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் லாபம் குறித்து நாளை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications