மும்பை: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகள் வெளியிட்டுள்ளது.
சந்தைக் கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் அதிகளவில் குறையவில்லை என்றாலும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.
வருவாய்
டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தின் மூலம் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் சுமார் 29,284 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. கடந்த காலாண்டில்
டாலர் வருவாய் அளவுகளைப் பார்க்கும் போது இதன் அளவு 4,374 மில்லியன் டாலராக உள்ளது.
லாப அளவுகள்
ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாப அளவுகள் 7,617 கோடி ரூபாயாக உள்ளது.
வரி பிடித்த பின் இதன் அளவு 6,586 கோடி ரூபாயாக உள்ளது. முதல் காலாண்டில் இதன் அளவு 6,317 கோடி ரூபாயாகவும், 2016ஆம் நிதியாண்டில் இதன் அளவு 6,055 கோடி ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தை வர்த்தகம்
இந்நிறுவனத்தின் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் 3.7 சதவீதமும், வட அமெரிக்கா வர்த்தகம் 1.4 சதவீதமும், ஆசிய பசிபிக் வர்த்ததம் 3.5 சதவீதமும், உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய சந்தை வர்த்தகம் 7.6 சதவீதம் அளவிற்குச் சரிவை சந்தித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
2வது காலாண்டு காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புடை ஆர்டர்களை 1 தான் பெற்றுள்ளது. கடந்த காலாண்டில் இதன் எண்ணிக்கை 77ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள்ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டில் இந்நிறுவனத்தில் புதிதாக 22,665 ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டில் இந்நிறுவனத்தில் புதிதாக 22,665 ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் வெளியேற்றம்
கடந்த 12 மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றத்தின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 11.9 சதவீதமாக உள்ளது.
BFSI துறை
இக்காலாண்டில் BFSI துறையின் வர்த்தகம் மற்றும் வருமான 1.2 சதவீதம் குறைந்தாலும் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 1 சதவீதமாக உள்ளது. இதனால் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்புமில்லை.
சந்திரசேகரன்
பிரெக்ஸிட் மற்றும் BFSI துறையினால் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். மேலும் அவர் 2வது காலாண்டு முடிவுகள் எப்போதும் நிறுவனத்திற்குச் சிறப்பானதாகவே இருந்தது, ஆனால் இந்த முறை மிகவும் குறைவான அளவிலான வர்த்தகத்தை எட்டியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications