பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் வியாழக்கிழமை மாலை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், இன்று இன்போசிஸ் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 4.3% மட்டுமே உயர்ந்த நிலையில் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதனால் இன்போசிஸ் நிறுவனம் கொண்டாட்டத்தில் உள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். என்ன விஷயம்..?
இன்போசிஸ்
சந்தைக் கணிப்புகளை உடைத்தெறிந்து புதிய வாடிக்கையாளர்கள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று 2வது காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
இந்நிறுவனத்தை லாப அளவுகள் மட்டும் சுமார் 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
லாபத்தில் உயர்வு
2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 3,398 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3,606 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் லாப உயர்வின் அளவு டிசிஸ் நிறுவனத்தை விடவும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் லாப அளவு 3,526 கோடி ரூபாயாக இருக்கும் எனச் சந்தை கணிப்புகள் வெளியானது, ஆனால் கணிப்புகளை உடைந்தெரிந்து கலக்கியுள்ளது இன்போசிஸ்.
வருவாய்
ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 16,782 கோடி ரூபாயாக இருந்த இன்போசிஸ் வருவாய் அளவு செப்டம்பர் காலாண்டில் 17,310 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு சுமார் 3.14 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதேக்காலக்கட்டத்தில் இன்போசிஸ் 10.71 சதவீத உயர்வுடன் 16,635 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்
2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இன்போதிஸ் சுமார் 78 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தற்போது 1,136 வாடிக்கையாளர்களுடன் பணியாற்றி வருகிறது.
ஈவுத்தொகை
இந்நிலையில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு 11 ரூபாய் வீதம் ஈவுத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
வருவாய் வளர்ச்சி குறைப்பு..
சந்தையில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பல வழிகளில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி அளவைக் கடந்த 6 மாதத்தில் 2 முறை குறைத்துள்ளது.
2017ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 13.5 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி அளவை இன்போசிஸ் நிர்வாகம் 10.5-12 சதவீகமாகக் குறைத்தது. தற்போது 1-9 சதவீதமாகக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
பங்குச்சந்தை
இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் உயர்ந்தாலும் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை படிக்க:
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications