இரவில் டான்ஸ் கிளப், பகலில் அலுவலகம்.. இதுதான் இந்தியாவின் புதிய 'ஸ்டார்டப் உலகம்'..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒவ்வொரு வார இறுதியிலும், புது தில்லியில் உள்ள உணவகம் மற்றும் நடன கிளப்கள் பார்டி பிரியர்களால் நிரம்பி வழிகின்றது. சோசியல் புது தில்லிக்கு அருகில் உள்ள ஹாஷ் காஸ் கிராமத்தின் விளிம்பில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி கட்டிடம் ஆகும். இது புது தில்லி நகரில் வசிக்கும் இரவுப் பறவைகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகின்றது.

சூரியன் மேற்கே மறைந்த பிறகு, இந்த பார் மிகவும் பிஸியாக மாறி விடுகின்றது, மற்றும் நடன க்ளப் பார்ட்டி பிரியர்களால் நிரம்பி வழிகின்றது. சோசியலுக்கு உள்ளே நுழையக் காத்திருக்கும் மக்களின் வரிசை தெருவிற்கு வெளியே வரை நீள்கின்றது. சோசியலில் நடன கிளப் நள்ளிரவு 1 மணி வரை பிஸியாவவே இருக்கின்றது.

இரவு விடுதி ஒரு வசதியான அலுவலகம்

இரவு விடுதி ஒரு வசதியான அலுவலகம்

ஆனால் ஒரு சில மணி நேரம் கழித்து, தண்ணீர் துளைகள் சுத்தமாக்கப்படுகின்றது. மேஜைகள் சுத்தமாக்கப்படுகின்றன. ஸ்பூன் மற்றும் தட்டுக்கள் அகற்றப்படுகின்றன. இரவு விடுதி ஒரு வசதியான அலுவலமாக மாற்றப்படுகின்றது. ஆனால் இந்த அலுவலகத்தில் குடித்ததற்காக யாரும் வேலையில் இருந்து விலக்கப்படுவதில்லை.

மேசைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்

மேசைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்

புகைப்படக்காரர்கள், வடிவமைப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், மென்பொருள் புரோகிராமர்கள் ஆகிய அனைவரும் இங்குச் சுமூகமாக மேசைகளைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அவர்கள், ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

தேவை இருப்பின் ஒருவரின் சேவையை கேட்டுப் பெற்று தங்களின் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அங்கிருக்கும் அனைவரும் ஒரு பகுதி நேர பணியாளர்கள் அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நிர்வகிப்போராக இருக்கின்றனர்.

 

ஸ்டார்டஅப் சந்தை

ஸ்டார்டஅப் சந்தை

இந்தியா தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்டஅப் நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக விளங்குகின்றது. அதன் காரணமாக பணியிடங்கள் பாரம்பரிய மற்றும் படிநிலை அலுவலகத்தில் இருந்து ஒரு தளர்வான மற்றும் பார் போன்ற அலுவலகமாக மாறத் தொடங்கி இருக்கின்றது.

முதலாளிகளுக்குத் தலைகுனிய விரும்பவில்லை

முதலாளிகளுக்குத் தலைகுனிய விரும்பவில்லை

"அது ஆயிரம் ஆண்டுகளின் ஆளுமை," என 29 வயதான டின்ஸா ஷாசன், சோசியலில் இருந்து வேலை செய்யும் ஒரு தனிப்பட்ட பத்திரிகையாளர் கூறுகிறார். "மக்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள பலதரப்பட்ட முதலாளிகளுக்குத் தலைகுனிய விரும்பவில்லை. அவர்கள் மிகவும் அர்த்தமுள்ள வேலையைத் தேடுகின்றனர். எனவே நான், இணைந்து வேலைப் புரியும் இது போன்ற அலுவலகங்கள் தான் இந்த மாதிரி தனிநபர்களின் உறைவிடமாக மாறப்போகின்றது என நினைக்கிறேன்."

இணை-வேலை அலுவலகங்கள்

இணை-வேலை அலுவலகங்கள்

முதன் முதலாக இது போன்ற இணை-வேலை அலுவலகங்கள் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கியது. ஆனால் இன்று, புது தில்லியில் மட்டும் குறைந்தது ஒரு டஜன் உள்ளன. இதில் சோசியலில் மட்டுமே ஒரு உணவகம் செயல்படுகிறது. இதைப் போன்ற அலுவலகங்கள் பெரும்பாலும் ஸ்டார்ட்அப் நிறுவங்கள் அதிகம் செயல்படும் நகரங்களான மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதெராபாத்ல் அதிகம் காணப்படுகின்றன.

4,200 தொழில்நுட்ப நிறுவனங்கள்

4,200 தொழில்நுட்ப நிறுவனங்கள்

கடந்த ஆண்டின் இறுதியில், இந்தியாவில் சுமார் 4,200 க்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள், பெரும்பாலும் போன் பயன்பாடுகள் அல்லது வலைத்தளங்கள் சார்ந்த நிறுவனங்கள், தொடங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்தியா இப்போது அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்யத்திற்குப் பின்னால் ,மூன்றாவது மிகப் பெரிய எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டுள்ளது, என தொழில், மென்பொருள், சேவைகள் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு அல்லது அல்லது நாஸ்காம் தெரிவித்துள்ளது. நாஸ்காம் ஒரு இந்திய தொழில் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

 

ஸ்டார்ட் அப் முதலீடுகள்

ஸ்டார்ட் அப் முதலீடுகள்

வெளிநாடுகளைச் சார்ந்த முதலீட்டாளர்கள் தங்கள் கருவூலங்களைத் திறந்து, இப்போது மிக அதிகமாக இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள் என, நாஸ்காம் தெரிவிக்கின்றது. ஸ்டார்ட்அப் நிறுவங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு கடந்த ஆண்டில் சுமார் 125 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் வரும் பிப்ரவரி 2017 க்கு முன்னால் சுமார் 700 மில்லியன் டாலர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது, என இனோவென், ஒரு ஆசிய மூலதன நிறுவனத்தின் 2016 ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லிக்யுட் கொள்கை

லிக்யுட் கொள்கை

ரியாஷ் அமலானி, சமூக உரிமையாளர் மற்றும் மாறிவரும் உணவகத் துறையில் ஒரு மிக முக்கிய புள்ளி, "நான் புது தில்லியின் பிரதான இடங்களில் மலிவான அலுவலக இடங்களுக்கு அதிக தேவை இருப்பதைக் கவனித்தேன். அதன் காரணமாக என்னுடைய உணவகங்களில் லிக்யுட் கொள்கைகளை(சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும்) செயல்படுத்த முடிவு செய்தேன்", எனத் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சுமார் 14 சமூக மையங்கள் உள்ளன. அவை அனைத்து இணை-வேலை அலுவலகங்களாகச் செயல்படுகின்றன.

அலுவலகங்கள், கஃபேக்கள்

அலுவலகங்கள், கஃபேக்கள்

"தற்பொழுது அலுவலகங்கள், கஃபேக்கள் போன்று செயல்படத் தொடங்கியது சரியா? கூகுள், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்றவை இதைப் பின்பற்றுகின்றனவே ", என 41 வயதான ஒருவர் தெரிவிக்கின்றார். "நீங்கள் ஒரு பாரம்பரிய அலுவலக சூழலுக்குச் சென்றால், அங்கு மிகவும் கடினமான மற்றும் உலர்ந்த சூழ்நிலை நிலவுவதை நீங்கள் உணரலாம். அங்கு எதுவும் வரிசைக் கிராமப்படி தான் நடைபெறும். உங்களின் முக்கியத்துவம் உங்களின் அலுவலகத்தின் மொத்தப் பரப்பின் மூலமே அளவிடப்படுகிறது" என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

வாடகை குறைவு

வாடகை குறைவு

பொதுவாக, எல்லா ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் 28 வயதிற்கும் குறைவானவர்களால் ஆரம்பிக்கப்படுகிஇன்றது. அவர்களால் தங்களின் அலுவலகத்திற்கு மிகவும் அதிகப்படியான வாடகை தர இயலாது.

உறுப்பினர் கட்டணம்

உறுப்பினர் கட்டணம்

அநேகமாக எல்லா இணை-வேலை மையங்களில் உறுப்பினர் கட்டணம் என்பது மாதத்திற்கு சுமார் 100 டாலருக்கும் குறைவாகவே இருக்கின்றது. இந்த மைய உறுப்பினர்களுக்கு அநேகமாக எல்லா நெட்வொர்க்கிங் நிகழ்வுகள், முதலீட்டாளர்கள் மாநாடுகள் மற்றும் பார்டிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. சோசியலில் உறுப்பினர்களுக்கு இலவச லாக்கர்கள், இலவச இணைய வசதி, மற்றும் உணவு மற்றும் பானங்களை தங்களின் மாதாந்திர கட்டணத்தைப் பயன்படுத்தி பெற முடியும்.

இணை-வேலை அலுவலகத்தைத் தேர்வு செய்யக் காரணம்

இணை-வேலை அலுவலகத்தைத் தேர்வு செய்யக் காரணம்

ரிஷி ஜாலான், ஒரு 25 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவ விளையாட்டு வீரர்களுக்கான ஒரு விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார். "தங்கு தடையற்ற கருத்துக்கள் மற்றும் உத்வேகம் போன்றவை ஒருவர் இணை-வேலை அலுவலகத்தைத் தேர்வு செய்ய முக்கிய காரணங்களாக விளங்குகின்றன", எனத் தெரிவிக்கின்றார்.

கோ வொர்க்கிங் (இணை வேலை)

கோ வொர்க்கிங் (இணை வேலை)

"ஒரு இணை- வேலை அலுவலகத்திற்குச் சென்று தங்களின் இணை நிறுவனர்களைக் கண்டறிந்த பல நண்பர்களை எனக்குத் தெரியும்," என கார்னெல் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி கூறுகிறார். " தில்லியில் உள்ள இணை-வேலை அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் ஒரு வித உத்வேகத்துடன் இருக்கின்றனர்,என நான் நினைக்கிறேன். ஏனெனில் முதலாவதாக அவர்கள் ஒரு தொழில்முனைவர். இரண்டாவதாக, அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றனர். "

குறைந்த ஊதியத்தைத் தவிர்த்தல்

குறைந்த ஊதியத்தைத் தவிர்த்தல்

ஜாலான் போன்று, பல இந்திய இளைஞர்கள் பாரம்பரியமான குறைந்த ஊதியம் தரும் வேலையில் நுழைவதைத் தவிர்த்து தாங்கலே சொந்தமாக எதாவது செய்ய விரும்புகின்றனர்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

"என்னுடைய நாட்களில், எங்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை," என அமலானி, சமூக உரிமையாளர் கூறுகிறார். " எங்களுக்கு மாவீரர்கள், போராளிகள் மற்றும் ராக் பாடகர்கள் ஹீரோக்களாக இருந்தனர். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு மார்க் ஜுக்கர்பெர்க், ஏலோன் கஸ்தூரி போன்ற மக்கள் ஹீரோக்களாக விளங்குகின்றனர்.

இன்றைய ஹீரோக்கள் ஒரு போன் செயலியை உருவாக்கி உலகையே மாற்றத் துடிப்பவர்களாக இருக்கின்றனர்", என்று அவர் கூறினார். "அவர்களிடம் வேட்கை பற்றி எரிகின்றது. அது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

நாம் அதைச் செயல்படுத்த உதவும் ஒரு மிகச் சிறிய கருவியாக விளங்குவது சந்தோஷமாக இருக்கிறது", என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: office அலுவலகம்
English summary

Offices By Day, Dance Clubs By Night. Welcome To New Workplaces

Offices By Day, Dance Clubs By Night. Welcome To New Workplaces
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X