டெல்லி: மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா பல்வேறு காரணங்களுக்காகத் தொடர் நிதிப்பற்றாக்குறை மற்றும் குறைவான வாடிக்கையாளர் எண்ணிக்கை மூலம் கடந்த 8 வருடமாகத் தொடர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் 2,636 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டு இருந்த ஏர் இந்தியா நிறுவனம் 2015-16ஆம் நிதியாண்டில் 105 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
ஏர் இந்தியா
கடந்த 10 வருடமாக ஏர் இந்தியா நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகளவில் ஈர்க்காத நிலையில் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்தது. இதனால் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சரிவர இயங்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவி..
இந்நிலையில் மோடி தலைமையிலான அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அதிகளவிலான நிதியுதவி செய்து நிறுவனத்தையும் புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்க உதவியது.
இதனால் தொடர் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பின் மூலம் ஏர் இந்தியாவின் வருவாய் மற்றும் லாப அளவுகள் அதிகரித்துள்ளது.
18 மில்லியன் பயணிகள்
2015-16ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 18 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று 1 கிலோமீட்டருக்கான இயக்கக் கட்டணம் 4.59 ரூபாயில் இருந்து 3.88 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஏர் இந்தியாவின் வருவாய் அளவு 20,526 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் லாபம் 108 கோடி ரூபாய் என் மிகப்பெரிய அளவை எட்டியுள்ளது.
எரிபொருள் கட்டணம்
மேலும் மொத்த வருவாயில் 40 சதவீத தொகை விமான ஏரிபொருளுக்காகச் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications