சென்னை: தீபாவளி பண்டிகை, பணவீக்கத்தில் சரிவு, உணவுப் பொருட்களின் விலை குறைவு, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு என வர்த்தகச் சந்தை மற்றும் மக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.
2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவுகள் 4.62 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ரத்தினம் மற்றும் தங்க நகைகள், இன்ஜினியரிங் பொருட்கள், ஆடை மற்றும் டெக்ஸ்டைல், இரும்பு மற்றும் கைவினை பொருட்கள் செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவு 4.62 சதவீத உயர்வுடன் 22.88 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் நாட்டில் இறக்குமதியின் 2.54 சதவீதம் குறைந்து 31.22 பில்லியன் டாலராக உள்ளது. இந்தச் சரிவிற்கு முக்கியக் காரணம் செப்டம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவுதான்.
இதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி, எலக்ட்ரானிக், உரங்கள், கெமிக்கல், டை மற்றும் இருப்பு, ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையின் தேவைக் குறைந்துள்ளதால் நாட்டின் ஏற்றுமதி கடந்த 18 மாதங்களாகத் தொடர் சரிவைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications