மும்பை: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 6 வருடத்திற்குப் பின், தனது டெலிகாம் டவர்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளது, பங்குச்சந்தையில் இறங்கும் திட்டத்தில் இருந்த இந்நிறுவனம் தோல்வியுற்றாலும், தனது மொபைல் டவர்களை வாங்கத் தகுதியான ஒரு டீலரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மொபைல் டவர் வர்த்தகக் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் இன்பராடெல்-இன் 51 சதவீத சொத்துக்களை உலகளாவிய மாற்று சொத்து மோலான்மை நிறுனமான பூரூக்பீல்டு இன்பராஸ்டக்சர் குரூப் நிறுவனத்திற்கு 11,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

ரிலையன்ஸ் இன்பராடெல் நிறுவனத்தின் 51 சதவீத சொத்துக்களை விற்பனை செய்தபின் எஞ்சியுள்ள 49 சதவீத சொத்துக்களை அனில் அம்பானி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை திட்டத்தில் கிடைக்கும் 11,000 கோடி ரூபாயை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்க அதிகளவில் உதவும் என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.
இதனால் இந்நிறுவனத்தின் பெயரில் இருக்கும் 42,000 கோடி ரூபாய் கடன் 17,000 கோடி ரூபாயாகக் குறைக்க அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications