1.5 மில்லியன் நோட் 7 போன்களைத் திரும்பப் பெற தீப்பிடிக்காத பெட்டிகள் அளிக்கிறது சாம்சங்..!

நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடியைத் தொடர்ந்து 1.5 மில்லியன் போன்களையும் திரும்பப்பெறும் முடிவை எடுத்துள்ளது சாம்சங். இதற்காக தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தீப்பிடிக்காத பெட்டிகள் அளித்துவருகிறது.

1.5 மில்லியன் நோட் 7 போன்களைத் திரும்பப் பெற தீப்பிடிக்காத பெட்டிகள் அளிக்கிறது சாம்சங்..!

இந்த தீப்பிடிக்காத பெட்டிகள் வீட்டில் சாதனத்தை தீப் பிடிக்காமல் பதுகாப்பாக வைத்திருந்து அனுப்பவதற்காகவே சாம்சங் அளித்து வருகிறது.

மேலும் இந்தப் போன்களை திரும்பப் பெற சம்சங்.காம் இணையதளம் மூலம் ப்ரீபெய்ட் கொரியர் முறையை உருவாக்கியுள்ளது.

தீப்பிடிக்காத பெட்டியை எப்படி பெறுவது

நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு இந்தப் பெட்டியை பெற்று சம்மந்தப்பட்ட கொரியர் சேவை வழங்குநரிடம் சமர்ப்பித்தால் போதும் என்றும் கூறியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் தீப்பிடிக்காத பெட்டி மற்றும் கிளவுஸ் பயன்படுத்தி எப்படி மொபைல் போனை பேக் செய்வது என்ற வீடியோவும் யூடியூபில் வெளியிட்டு உள்ளனர்.

 

எஸ்7, எஸ் 7 எட்ஜ் போன்கள்

எஸ்7, எஸ் 7 எட்ஜ் போன்கள்

சாம்சங் கேலக்ஸ் நோட் 7 மொபைல் போனை திரும்பப் பெற்ற பிறகு வாடிக்கையாளர்கள் மொத்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது நிறுவனத்தின் பிற தயாரிப்புகளான கேலக்ஸ் எஸ்7, எஸ் 7 எட்ஜ் போன்களைக் குறிப்பிட்ட அளவு பணத்துடன் பெற்றுக் கொள்ளாலாம் என்று தெரிவித்துள்ளனர்.

முழுவதும் ஸ்க்ராப்

முழுவதும் ஸ்க்ராப்

பெரிய அளவிலான கேலக்ஸி நோட் 7 மொபைல் போன்கள் வெடிப்பது குறித்த நெருக்கடியை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இந்தப் போனை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தது சாம்சங். மேலும் இதைத் தொடர்ந்து இப்போது தனது பிரீமியம் மாடல் எனக் கூறி வந்ததை முழுவதையும் ஸ்க்ராப் செய்ய இருக்கிறது சாமசங் நிறுவனம்.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

நோட் 7 மாடல் போனை சாம்சங் நிறுவனம் முழுவதுமாக நிறுத்த இருப்பதால் அக்டோபர் முதல் மார்ச் மாத இரண்டு காலாண்டுகளுடன் மொத்தமாக மூன்று காலாண்டு மட்டும் இல்லாமல் இந்த விழாக் காலத்திலும் தனது விற்பனையைப் பெறும் அளவில் இழந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு

நடப்பு நிதி ஆண்டு

நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு லாபத்தில் 2.2 பில்லியன் டாலர்கள் இழக்க நேரிடும் என்றும் 2017 முதல் காலாண்டில் 1 டிரில்லியன் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.

முழுவதுமாக நிறுத்த காரணம்

முழுவதுமாக நிறுத்த காரணம்

முதலில் 2.5 மில்லியன் கேலக்ஸி நோட் 7 சாதனங்களை திரும்பப் பெற்று மாற்றுச் சாதனங்கள் அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் புதிய சாதனங்களும் வெடித்ததைத் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை முழுவதுமாக நிறுத்த சாம்சங் முடிவு செய்துள்ளது.

போன் வெடித்ததற்குக் காரணமாக மொபைல் போன் பேட்டரிகளே என்றும் அதற்குக் காரணம் எந்த நிறுவனம் என்றும் குறிப்பிடவில்லை.

 

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள்

வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இதுபற்றி கூறுகையில் ஐபோனிற்கு போட்டியாக சாம்சங் மிக வேகமாக ஸ்மார்ட்போன் அறிமுக செய்ய முயற்சி செய்தது மற்றும் சாதனத்தில் உள்ள டெக்னாலஜி கோளாறே இதற்கான காரணம் எனக் கூறுகின்றனர்.

பல மாற்றங்கள்

பல மாற்றங்கள்

சாம்சங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது தயாரிப்புகளில் இன்னும் பல மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

20 பில்லியன் வரை இழப்பு

20 பில்லியன் வரை இழப்பு

நோட் 7 படுதோல்வி அடைந்ததை அடுத்து சாம்சங் நிறுவனத்திற்கு 10 பில்லியன் முதல் 20 பில்லியன் வரை லாபத்தில் இழப்பு நேரிடலாம் என்று நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த பெறும் தோல்வியால் மொபைல் போன் துறையில் சாம்சங் நிறுவனம் பெறும் இழப்பைச் சந்தித்துள்ளது மட்டும் இல்லாமல் மீண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகபும் கடினம் என்று எச்எம்சி இன்வெஸ்ட்மெண்ட் செக்யூரிட்டிஸ் நிறுவன ஆய்வாளர் ஜார்ஜ் ரோச் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+