இந்தியாவில் 2050-ம் வருடத்திற்குள் 7 மில்லியன் வேலை வாய்ப்புகள் பறிபோக வாய்ப்பு - அறிக்கை

டெல்லி: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தினம் 550 வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இது தொடர்ந்தால் 2050-இல் 7 மில்லியன் வேலை வாய்ப்புகள் குறைந்திருக்கும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

விவசாயிகள், ரோட்டுக் கடை வணிகர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கட்டுமான வேலையாட்கள் இதில் பெருவாரியாக பாதிக்கப்படுவார்கள் என்று டெல்லியைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுவான பரஹார் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள் குறைவு

வேலை வாய்ப்புகள் குறைவு

2016 ஆம் ஆண்டு தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள தரவில் 2015 ஆம் ஆண்டு 1.35 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதுவே 2013 ஆம் ஆண்டு 4.19 லட்சம் வேலை வாய்ப்புகளும், 2011 ஆம் ஆண்டு 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் 550 வேலை வாய்ப்புகள்

தினமும் 550 வேலை வாய்ப்புகள்

இப்போது வெளியாகி உள்ள தரவை ஆலமாகப் பார்க்கும் போது மிகவும் பயமாக உள்ளது. இந்திய மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடைவதற்குப் பதிலாக தினமும் 550 பேருக்கான வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. அப்படி என்றால் 7 மில்லியன் பேருக்குக்காண வேலை வாய்ப்பு குறைந்து இருக்கும் என்றும் மக்கள் தொகை 600 மில்லியனாக இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு குறையும் துறைகள்

வேலை வாய்ப்பு குறையும் துறைகள்

இந்தத் தரவை பார்க்கும் போது இந்தியாவில் வேலை வாய்ப்பு மிக வேகமாகக் குறைந்து அபாயக்கட்டத்தை நோக்கிப் பயணிப்பதை காட்டுகிறது.

வேலை வாய்ப்பு குறைந்து வருவதில் விவசாயத் துறை 50 சதவீதத்தையும் பிற நிறுவனங்கள் 40 சதவீதத்தையும் நிரப்பும் என்று கூறப்படுகிறது.

 

அரசு நிரிவாகங்களில் வேலை வாய்ப்பு

அரசு நிரிவாகங்களில் வேலை வாய்ப்பு

அரசு நிர்வாகங்கள் 1 சதவீதம் மட்டுமே வேலை வாய்ப்பினை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 30 மில்லியன் வேலை மட்டுமே ஒழுங்குமுறை படுத்தப்பட்ட நிர்வாகங்களில் இருந்தும் 440 மில்லியன் வேலை வாய்ப்புகள் ஒழுங்குமுறை படுத்தப்படாத நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

உலக வங்கி

உலக வங்கி

உலக வங்கியின் அறிக்கை படி 1994 ஆம் ஆண்டு 60 சதவீத வேலை வாய்ப்பை அளித்து வந்த விவசாயத் துறை 2013 ஆம் ஆண்டு 50 சதவீத வேலை வாய்ப்பை மட்டுமே அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களை விட குறு சிறு நிறுவனங்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டம் வாயிலாக இந்தியாவிற்கு வரும் முதலீடுகளின் படி அடுத்த 5 வருடத்தில் 6 மில்லியன்ன் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கிராமங்களா? ஸ்மார்ட் நகரங்களா..?

ஸ்மார்ட் கிராமங்களா? ஸ்மார்ட் நகரங்களா..?

இந்தியா மீண்டும் விவசாயம், அமைப்பு சாரா சில்லறை வணிகம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் மட்டுமே தற்போதைய மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குத் தேவை "ஸ்மார்ட் கிராமங்கள் தான் ஸ்மார்ட் நகரங்கள் அல்ல" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+