உள்நாட்டு சந்தையை கடுமையாக பாதிக்கக் கூடிய உலகளாவிய காரணிகள்..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக காரணிகளின் அழுத்தம் காரணமாக, நம் இந்தியப் பங்குச் சந்தை சந்தையானது வரும் நாட்களில் தடுமாறத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனவே, நாங்கள் பங்குச் சந்தையை தடுமாற செய்யக்கூடிய உலகளாவிய விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.

அமெரிக்க மத்திய வங்கியின் நிச்சயமற்ற தன்மை

அமெரிக்க மத்திய வங்கியின் நிச்சயமற்ற தன்மை

அண்மையில் வெளியான அமெரிக்க வேலை வாய்புகள் பற்றிய பொருளாதார தரவுகள், டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை அறிவிப்புகளில் வட்டி விகதம் உயர்த்துவது பற்றிய அறிவுப்புகள் இருக்கும் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு

வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு

வர்த்தகர்கள், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்த 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றார்கள் என, சி எம் இ நிறுவனத்தின் மத்திய வங்கி கண்காணிப்பு கருவி அறிவுறுத்துகிறது.

உலக பங்குச் சந்தை
 

உலக பங்குச் சந்தை

ஜேனட் யெல்லென் தலைமை தாங்கிய அமெரிக்க மத்திய வங்கியின் செப்டம்பர் மாதக் கூட்டத்தில், வட்டி விகித மாற்றங்கள் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதன் காரணமாக உலக பங்குச் சந்தைகளில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழவில்லை.

பொருளாதார தரவு

பொருளாதார தரவு

"அதிகாரப் பூர்வ அறிவிப்பில் FOMC யின் மைய வாக்காள உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களித்துள்ளார்கள் என்பதைப் பற்றிய தரவுகள் நிச்சயம் இடம்பெறும். அவர்களுக்கு இடையே அதிக கருத்து ஒற்றுமை இல்லை எனில், அது தற்பொழுது வெளி வந்துள்ள பொருளாதார தரவுகளுடன் இணைந்து டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்த வழி வகுக்க அதிக சாத்தியங்கள் உள்ளன" என என் ஏ பி ஆய்வாளர் வெய்ன் லாய் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் நிலவரம்

கச்சா எண்ணெய் நிலவரம்

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் (ஒபெக்) முகாமின் 14 உறுப்பினர்கள், கச்சா எண்ணெய்யின் உற்பத்தியை குறைப்பது சம்பந்தமாக ஒரு ஏகோபித்த முடிவை எடுத்திருந்தாலும், வர்த்தகர்கள் உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் குறைப்பது தொடர்பாக, ஒபெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே உறுதியற்ற தன்மை நிலவுவதாக கருதுகின்றார்கள்.

இந்தியா பாதிக்கப்பட காரணம்

இந்தியா பாதிக்கப்பட காரணம்

கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியானது, உலகளாவிய நிதி நிறுவனங்களை சரக்கு ஏற்றுமதி சார்ந்து வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை குறைத்துக் கொள்ள வழி வகுத்தது. இதன் காரணமாக இந்தியாவும் பாதிக்கப்பட்டது.

உலகளாவிய சந்தை

உலகளாவிய சந்தை

உலகளாவிய சந்தை, நிலையாக உயர்ந்து வரும் கச்சா எண்ணையின் விலையை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்கிற ஒரு மிகப் பெரிய கேள்வி நம்முன் எழுகின்றது.

எண்ணெய் உற்பத்தி குறைப்பு தொடர்பாக ரஷ்யாவின் வார்த்தைகளின் மீது ஒரு நிச்சயமற்ற தன்மை நிழவுகின்றது. இது உலகளாவிய சந்தைகளை பாதிக்கின்றது.

இதுவரை, உலகச் சந்தைகள் கச்சா எண்ணைய் விலை உயர்வை வரவேற்றுள்ளன. இனி மேழும் இது தொடருமா?

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்

சந்தை எச்சரிக்கையுடன் கவனித்து வரும் மற்றொரு முக்கியமான செய்தி இது. இதுவரை வெளியான யூகங்களின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும், டொனால்டு டிரம்ப் எப்படியும் வெற்றி பெற்று விடுவார் என்கிற யூகங்களும் சந்தையில் அடிபடுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அது உள்நாட்டு சந்தைக்கு சாதகமாக இருக்கும், என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜப்பான் வங்கி தரும் சமிக்ஞைகள்

ஜப்பான் வங்கி தரும் சமிக்ஞைகள்

ஜப்பான் மத்திய வங்கியின் கொள்கை வகுப்பாளர்கள், தங்களுடைய சந்தையை தொடர்ந்து ஊக்கப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களின் ஊக்குவிப்பானது ஜப்பானின் சந்தையை வெளிநாட்டு சக்திகளிடம் காக்க மட்டுமே உதவும் என்கிற கருத்து நிழவுகின்றது.

மேழும் அவர்கள் சந்தையின் அதிகபட்ச ஊக்குவிப்பை அதிகப்படுத்தப் போவதாக சில சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளிப்புற அதிர்ச்சிகளிடம் இருந்து தங்களுடைய பொருளாதாரத்தை காக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

"நாங்கள், சந்தை சில ஊக்குவிப்புகளை எதிர்நோக்குகின்றது என்கிற தீர்மானத்திற்கு வர நேரிட்டாள், குறுகிய கால வட்டி விகிதங்கள் குறைப்பது உட்பட நாட்டின் பொருளாதார கொள்கையை தளர்த்த தயராக உள்ளோம்," என BOJ இன் ஆளுநர் ஹருகிகோ குரோடா, புதனன்று கூறினார்.

பவுண்ட்- டாலர் இயக்கம்

பவுண்ட்- டாலர் இயக்கம்

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, ஜரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனின் வெளியேற்றம் தொடர்பாக, அரசாங்கத்தின் முறையான பேச்சு வார்த்தையை வருகின்ற மார்ச் 31 ம் தேதி தொடங்க உள்ளோம் என அறிவித்த பின்னர், பிரிட்டனின் பவுண்ட் ஆனது டாலருக்கு எதிரான தனது 31 ஆண்டு கால மிகக் குறைந்த அளவை தொட்டது.

பிரிட்டனின் வெளியேற்றம்

பிரிட்டனின் வெளியேற்றம்

இதற்கிடையில் புதனன்று, மே அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனின் வெளியேற்றம் தொடர்பாக தனது மூலோபாயத்தின் மீது வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார், என ப்ளூம்பெர்க் தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: market சந்தை
English summary

global cues that may keep domestic market choppy

5 global cues that may keep domestic market choppy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X