தங்கத்தை நேரடியாக வாங்காமல் வேறு வழிகளில் வாங்க பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
மும்பை: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்ற மாதம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களைப் புதன்கிழமை அக்டோபர் 19 முதல் பங்குச்சந்தையிலும் வர்த்தகம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

2016-2017 ஆண்டின் சவரன் தங்கப் பத்திரங்களின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட் மாதம் வேலியிடப்பட்டது. அதன் ஐந்தாவது பகுதி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 தேதி வரை விற்பனை செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேரடி தங்கத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்க பத்திரங்கள் மூலம் தங்கத்தை வாங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது.
இதற்குப் பெறப்பட்ட வரவேற்பை அடுத்து 5-ஆம் பகுதி விற்பனையின் போது மட்டும் 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த தங்க பத்திரங்களை மக்கள் இடையில் எடுத்துச் செல்ல வங்கிகள், தபால் நிலையங்கள், தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை போன்றவை பெரிதும் உதவின.
தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் துவக்கம் முதலே வருடத்திற்கு 2.75 சதவீதம் லாபம் பெறுவர்.


Click it and Unblock the Notifications