2 மடங்கு அதிகக் கட்டணம் வசூல்.. மக்களிடம் கொள்ளையடிக்கும் ஓலா, உபர்..!

ஓட்டுநர் நலன் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் இரட்டிப்பு கட்டணத்தை வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது ஓலா, உபர் டாக்ஸி நிறுவனங்கள். கூடிய விரைவில் இந்தியா முழுவதும் அமல்.

டெல்லி: நாட்டின் முன்னணி டாக்ஸி நிறுவனங்களாக ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 20 கிலோமீட்டர் தூரம் பயணத்தை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்யத் துவங்கியுள்ளது.

இதனால் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் மக்கள் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களை வெறுக்கத் துவங்கியுள்ளனர். இந்தப் புதிய கட்டண விதிமுறைகள் அடுத்தச் சில நாட்களில் இந்தியா முழுவதும் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது உபர் நிறுவனம்.

டாக்ஸி நிறுவனங்கள்

டாக்ஸி நிறுவனங்கள்

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் துவங்கிய பின், மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு 3 துறைகள், அவை ஈகாமர்ஸ், உணவு ஆர்டர் செய்யும் நிறுவனங்கள் மற்றொன்று ஆன்லைன் டாக்ஸி புக்கிங் நிறுவனங்கள்.

ஈகாமர்ஸ் மற்றும் உணவு நிறுவனங்களில் அதிகளவிலான பிரச்சனைகள் இருந்தாலும் வளர்ச்சியில் தொய்வில்லை. ஆனால் டாக்ஸி நிறுவன துறையில் கட்டண உயர்வு, அதிகக் கட்டணம் வசூல் ஆகியவற்றைத் தவிரப் பெரிய பிரச்சனை எதுவும் வந்ததில்லை.

 

கட்டண உயர்வு

கட்டண உயர்வு

இந்நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 20 கிலோமீட்டருக்கும் அதிகத் தொலைவிற்குப் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் 2 மடங்கு அதிகக் கட்டணங்களை வசூல் செய்வதாக அறிவித்துள்ளது.

உபர் நிறுவனத்தின் அட்டூழியம்

உபர் நிறுவனத்தின் அட்டூழியம்

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 20 கிலோமீட்டருக்குப் பின் 2 மடங்கு அதிகக் கட்டணங்களை வசூல் செய்யும் உபர் நிறுவனம் விசாகபட்டினம், கொல்கத்தா, புவனேஸ்வர், கவுகாத்தி பகுதிகளிலும் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்ய உள்ளோம் என அறிவித்துள்ளது.

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 20 கிலோமீட்டர் என்றால் விசாகபட்டினம் மற்றும் கொல்கத்தாவில் 15 கிலோமீட்டர், புவனேஸ்வர், கவுகாத்தி 12 கிலோமீட்டர் எனப் பயணத் தூரத்தை நிர்ணயம் செய்துள்ளது.

தத்தகம் பகுதிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட தொலைவைத் தாண்டினால் 2 மடங்கு அதிகக் கட்டணத்தை வசூல் செய்யப்படும் என உபர் தெரிவித்துள்ளது.

 

ஒட்டுநர்கள்

ஒட்டுநர்கள்

இந்தக் கட்டண உயர்வு குறித்து, எங்களது நிறுவனத்துடன் இணைந்துள்ள ஒட்டுநர்களின் நலன் மற்றும் பொருளாதாரத்தை நிலைநாட்டவே இக்கட்டண உயர்வை அறிவிக்கப்பட்டுள்ள என் உபர் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உபர்

உபர்

டெல்லியில் உபர்கோ சேவையில் 20 கிலோமீட்டர் வரை 6/கிலோமீட்டர் அதன் பின் புதிய கட்டணத்தின் படி 12/கிலோமீட்டர் ரூபாய் வசூல் செய்யப்படும், உபர்எக்ஸ் சேவையில் 20 கிலோமீட்டர் வரை 9/கிலோமீட்டர் ரூபாயும் அதன் பின் பயணம் செய்யப்படும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 13 ரூபாய்க் கட்டணமாக விதிக்கப்படும்.

அதனால் மலிவான சேவை அளிக்கும் நிறுவனம் என்ற பெயரை உபர் நிறுவனம் தற்போது இழந்துள்ளது.

 

பிற பகுதிகள்

பிற பகுதிகள்

இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இக்கூடுதல் கட்டண விதிப்பை அறிவிக்கத் திட்டமிட்டுள்ள இந்த டாக்ஸி நிறுவனம்.

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

உபர் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஓலா நிறுவனம் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் 20 கிலோமீட்டர் வரை 6/கிலோமீட்டர் அதன் பின் பயணம் செய்யப்படும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 12 ரூபாய்க் கட்டணமாக விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 டாக்ஸி வாடிக்கையாளர்கள்

டாக்ஸி வாடிக்கையாளர்கள்

கடந்த சில மாதங்களாக டாக்ஸி நிறுவனங்கள் தங்களது கட்டணத்தைக் கண்மூடித்தனமாக உயர்த்தி வருகிறது. இதனால் ஆன்லைன் டாக்ஸி வாடிக்கையாளர்கள் அதிகளவில் தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+