மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன? உங்களுக்கு ஏற்ற சரியான மியூச்சுவல் பண்ட்-ஐ தேர்வு செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருடா வருடம் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லை. இப்படி ஆர்வம் உள்ளவர்கள் அவர்களது குறிக்கோளை அடைய மியூச்சிவல் ஃபண்டுகள் கண்டிப்பாக உதவும்.

 

முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து தங்களது இலக்கை அடைய மியூச்சுவல் பண்டுகளைத் தவிர வேறு முதலீடு திட்டங்கள் ஏதும் இருக்க இயலாது.

மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த பிறகு பங்குச் சந்தையை போலத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்ற அவல நிலையும் இதில் இல்லை.

பலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான முக்கிய காரணம் அதிக லாபம் பெற இயலும் என்ற காரணத்திற்காகவே. அதே நேரம் இந்த முதலீடுகளில் ரிஸ்க் இல்லாமலும் இல்லை.

மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள சிறப்புகள்

மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள சிறப்புகள்

முதலீட்டாளர்களுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு வரி விலக்கு. டெப்ட், ஈக்விட்டி, கமாடிட்டி என எதில் வேண்டும் என்றாலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு.

வெளிநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு மற்றும் பிபிஎப், வைப்பு நிதி திட்டங்கள் போன்றவற்றை விட அதிக லாபம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு

ஒருவர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன்பு வருமானம், செலவு, முதலீடுகள், முதலீடுகளின் இலக்கு போன்றவற்றை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

நிதி சூழல் மற்றும் இலக்கைத் தவிர வயது, முதலீட்டு முறை, ஆளுமை மற்றும் ரிஸ்க் வரும் போது சமாளிக்கும் திறன் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நடப்பு சூழலை கருத்தில் கொண்டு உங்களது நிதி சூழலின் இலக்கை முடிவு செய்ய வேண்டும் பின்னர் குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடு திட்டங்களை தேர்வு செய்யவும்.

ஆபத்து நிலை
 

ஆபத்து நிலை

நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்புபவரா? இல்லையா? பங்குச் சந்தையில் முதலீடு செய்து நட்டத்தைச் சந்தித்து தூக்கத்தைத் தொலைத்து உள்ளீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதைத் தவித்து விடவும். மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் உள்ளன.

குறைவான ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள், அதிக ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் என இரண்டு வகையாக உள்ளன.

இதில் குறைவான ரிஸ்க் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளில் குறிப்பிட்ட அளவு லாபம் அதாவது குறைந்தது 9 முதல் 15 சடவீதம் வரை பெற இயலும்.

அதுவே அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 30 சதவீதம் வரை லாபம் பெற இயலும்.

ஆனால் முதலீட்டாளர்கள் இரண்டு ரிஸ்க் முதலீடுகளிலும் கலந்து முதலீடு செய்வது தான் நல்ல லாபத்தை அளிக்கும் என்று கூறுகின்றனர்.

முதலீட்டு மாதிரி

முதலீட்டு மாதிரி

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது முறையான முதலீட்டுத் திட்டம்-SIP மற்றும் மொத்த முதலீடு என இரண்டு பிரிவாக முதலீடு செய்யலாம்.

மொத்த முதலீடு திட்டம் என்பது மொத்தமாக ஒரு முறை முதலீடு செய்வதாகும். அதுவே SIP முதலீடு திட்டங்கள் மூலம் செய்யும் போது மாதம் குறைந்தது 1000 ரூபாய் முதல் தங்களது முதலீட்டைத் துவங்கலாம்.

சுருக்கம்

சுருக்கம்

1) நிதி இலக்குகளை முடிவு செய்து உங்கள் இலக்குகளை முடிவு செய்யுங்கள்.

2) நிதியின் செயல்திறன், செலவு விகிதம், சொத்து மதிப்பைப் பார்த்து மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யுங்கள்.

3) முறையான முதலீட்டுத் திட்டம்(SIP - Systematic Investment Plan) வழியாகத் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

what is meant mutual funds? How to find the right MF for you?

what is meant mutual funds? How to find the right MF for you?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X