ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் உள்நாட்டு பயணங்களுக்கான அதிரடி ஆஃபர்கள்.
பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா நிறுவனம் 899 ரூபாய்க்கு விமான பயண டிக்கெட்களை விளம்பர ஆஃபராக அறிவித்துள்ளது.
சலுகை காலம்
இந்த சலுகை விலை டிக்கெட்களில் மார்ச் 31, 2017 வரை பயணம் செய்யலாம் என்றும் அக்டோபர் 23 ஆம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்றும் ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
சலுகை கட்டண வழித்தடங்கள்
899 ரூபாய்க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம்.
மேலும் 999 ரூபாய் கட்டணத்தில் கொச்சி முதல் பெங்களூரு வரையிலும், கொச்சி முதல் ஹைத்ராபத் வரை செல்ல 2,699 ரூபாய் கட்டணத்திலும் கோவாவில் இருந்து டெல்லி செல்ல 3,199 ரூபாயிலும், ஜெய்ப்பூர் முதல் பூனே வரை செல்ல 2,399 ரூபாய் கட்டணமாக அறிவித்துள்ளது.
சிறப்பு வழித்தடம்
ஏர் ஏசியாவின் இணையதளத்தில் பெங்களூரு முதல் டெல்லி செல்ல இப்போது 8000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது ஆனால் சலுகை விலை கட்டணமாக 2,699 ரூபாயாக டிசம்பர் மாதத்திற்கு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்கள்
இதேப் போன்று பிற நிறுவனங்களும் சலுகை விலையில் விழாக்கால ஆஃபர்களில் விமான பயண கட்டணத்தை அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications