எண்ணெய் சந்தியில் எல்லோருடைய மனநிலையும் நம்பிக்கையோடு விலை இன்னும் அதிகரிக்கும் என்று காத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மும்பை: சந்தை நிலவரப்படி நேற்றையை அமெரிக்க பங்குச் சந்தை சரிவால் வியாழக்கிழமை கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறது.

அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலையில் (WTI) கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகத்தின் விலை 34 சென்ட் குறைந்து பேரலுக்கு 51.44 டாலருக்கு வர்த்தகம் ஆகின்றது.
உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை 26 சென்ட் குறைந்து பேரலுக்கு 52.41 டாலாரக விற்பனை ஆகிறது.
நேற்றைய வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தில் ஒருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டதே இந்த 15 மாத உயர்வுக்கான காரணம் என்று கூரப்படுகிறது.
இன்று இரவு மீண்டும் தொடர்ந்து விலை உயரலாம் என்று ஏஎன்ஜட் வங்கி தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா நாட்டின் எரிசக்தி அமைச்சர் காலித் அல் ஃபெளைச் இது குறித்து கூறுகையில் இந்த விலை குறைப்பினால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் மேலும் பல புதிய முதலீடுகள் கிடைக்கும் என்று கூறினார்.

எண்ணெய் சந்தியில் எல்லோருடைய மனநிலையும் நம்பிக்கையோடு விலை இன்னும் அதிகரிக்கும் என்று காத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதி கூட்டம் ஒன்றை நடத்த முடிவுசெய்துள்ளதாகவும் அதில் அரை மில்லியன் உற்பத்தியைக் குறைத்து 1 மில்லியன் பேரல்கள் வரை மட்டும் ஏற்றுமதி செய்யும் முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய்யின் பேரல் விலை 60 டாலர் எட்டும் என்று கூரப்படுகிறது.


Click it and Unblock the Notifications