சந்தை கணிப்புகளை உடைத்து 7,700 கோடி ரூபாய் லாபம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கலக்கல்
மும்பை: நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7,704 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் 6,534 கோடி ரூபாயாக இருந்த தற்போது 17.90 சதவீதம் அளவிற்கு உயர்வைச் சந்தித்துள்ளது.

ஆனால் சந்தை கணிப்புகள் இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 7,250 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 0.27 சதவீதம் குறைந்து 64,340 கோடி ரூபாயைப் பெற்றது.


Click it and Unblock the Notifications