இந்த வருவாய் பருவத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு வருவாய், செய்தியாக வெளிவரத் தொடங்கி விட்டது. நிபுணர்கள் இதைப் பற்றி விரிவாகப் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். எனவே நீங்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய தருணம் வந்து விட்டது. ஆட்டோ, சிமெண்ட் மற்றும் மூலதன பொருட்கள் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கலாம் என பல தரப்பினரும் தெரிவிக்கின்றார்கள்.

 

எனவே நாம் இந்த வருவாய் பருவத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் பங்குகள் மற்றும் அவற்றின் தாக்கங்களை தொகுத்து உங்களுக்காக ஒரு பட்டியல் தயாரித்துள்ளோம்.

ஒற்றைப் புள்ளியில் குவியும் சி பி ஐ மற்றும் டபிள்யு பி ஐ

ஒற்றைப் புள்ளியில் குவியும் சி பி ஐ மற்றும் டபிள்யு பி ஐ

நுகர்வோர் விலைக் குறியீடு (சி பி ஐ) மற்றும் மொத்த விலைக் குறியீட்டுக்கு (டபிள்யு பி ஐ) இடையே உள்ள வித்தியாசம் கடந்த செப்டம்பர் 2015 ல் 9 சதவீதமாக இருந்தது. அதுவே செப்டம்பர் 2016 ல் 1.3 சதவீதமாகச் சுருங்கி விட்டது. அதிகரித்து வரும் மொத்த விலைக் குறியீடு இந்திய நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்க உதவி புரியும்.

மொத்த விலைக் குறியீடு

மொத்த விலைக் குறியீடு

அதிகரித்து வரும் மொத்த விலைக் குறியீடு எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களின் விற்பனையைக் கண்டிப்பாக அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும் ஒரு நல்ல குறியீடாக கருதப்படுகின்றது. நிறுவனங்களின் விற்பனையைக் கண்காணித்து வரும் எம் ஓ எஸ் எல் ன் அறிக்கையின் படி, இந்திய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியானது 2017 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 1.7 சதவீதமாக இருக்கும். தொடர்ச்சியாக 7 காலாண்டு சரிவுகளுக்கு பிறகு அதிகரிக்கும் விற்பனை ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகின்றது. "நாம் இன்னும் அதிகமாக விற்பனை அதிகரிக்கும் மற்றும் வலுப்படும் என எதிர்பார்க்கின்றோம்", என எம் ஓ எஸ் எல் ன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முலதனக் கடன்
 

முலதனக் கடன்

மேலும், இது நிறுவனங்களின் மூலதனத் தேவையை அதிகரிக்கும். அதன் காரணமாக வங்கிகள் வழங்கும் மூலதனக் கடன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (தோராயமாக கடன் புத்தகத்தில் 15%).

அதிகரிக்கும் மொத்த விலைக் குறியீடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். அதன் காரணமாக அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகரிக்கும்.

மிதமான வட்டி விகிதங்கள்

மிதமான வட்டி விகிதங்கள்

அதிகரித்து வரும் மொத்த விலை குறியீடு வட்டி குறைப்பை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகின்றது. அவ்வாறு வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்படும் பொழுது ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், போன்ற துறைகள் வளர்ச்சி அடையும்.

லாப வரம்பின் மீதான அழுத்தம்

லாப வரம்பின் மீதான அழுத்தம்

அதிகரித்து வரும் மொத்த விலைக் குறியீடு பொருட்களின் மீதான இலாப வரம்பில் சிறிய தாக்கத்தை உண்டாக்குகின்றது. இது பொருட்களின் விலையைக் குறைத்து சந்தையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை உருவாக்குகின்றது. இலாப வரம்பு குறைந்தாலும், அதிகரிக்கும் விற்பனை அதை ஈடுகட்டிவிடுவதால், மொத்த வருவாய் மற்றும் விற்பனைக்குப் பிந்திய இலாபம் குறையாமல் அதிகரிக்கவே செய்கின்றது.

குறையும் வட்டி விகிதம் நிதிச் சலுகையை அதிகரிக்கும்

குறையும் வட்டி விகிதம் நிதிச் சலுகையை அதிகரிக்கும்

பத்து வருட அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 250 புள்ளிகள் குறைந்து சுமார் 6.8 சதவீதமாக உள்ளது. இது வங்கிகளின் வட்டி விகிதங்களை குறைக்கத் தூண்டும், கருவூலத்திற்கு அதிக இலாபங்களைத் தரும், மற்றும் சில்லறை பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது வங்கிகளின் கடன் பத்திரங்கள் சார்ந்த போர்ட்போலியோவின் வெற்றியை அதிகரிக்கும். அதன் காரணமாக வங்கிகளின் வர்த்தகம் அதிகரிக்கும்.

நுகர்வோர் சாதனங்கள்

நுகர்வோர் சாதனங்கள்

நுகர்வோர் விருப்புரிமை (ஆட்டோக்கள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் போன்றவை) துறைகள் இந்த குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

துறைகளின் வளர்ச்சி

துறைகளின் வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சியின் காரணமாக , சிமெண்ட், உலோகம் போன்ற துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். இது 2018 ம் வருவாய் ஆண்டில் பிரிதிபலிக்கும். 2018 ம் ஆண்டில் வரிக்குப் பிந்திய வருவாயில் இதன் வளர்ச்சி சுமார் 25 சதவீதமாக அதிகரிக்கும். அதே நேரம் கணக்கீட்டுக்கு முந்தய வருவாய் சுமார் 16 சதவீதமாக இருக்கலாம்.

நிதி நிறுவனங்களின் வட்டி

நிதி நிறுவனங்களின் வட்டி

நிதி நிறுவனங்களின் வட்டி

சுழற்சி முறையிலான துறைகளில் சாதகமான அடிப்படை விளைவு

சுழற்சி முறையிலான துறைகளில் சாதகமான அடிப்படை விளைவு

கடந்த 7-8 காலாண்டுகளில் வருவாய் செயல்திறன் முடக்கியதன் காரணமாக பல சுழற்சி முறையிலான துறைகள் சாதகமான வருவாயைப் பெற்றுள்ளது. ஆட்டோ, சிமெண்ட், மூலதன பொருட்கள், உலோகம், அரசுடைமை வங்கிகள் மற்றும் எண்ணெய் & எரிவாயு போன்ற துறைகள் 2017ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் குறைந்த வட்டி விகிதம் காரணமாக அதிகம் பயனடைவார்கள்.

இதற்கு மத்தியில், உலோகங்கள் மற்றும் அரசுடைமை வங்கிகள் வருமான இழப்பைச் சந்திக்கும். எனினும் வருவாய் வீழ்ச்சியானது மிகவும் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்படுகின்றது.

அரசுடைமை வங்கிகளின் வருவாய்

அரசுடைமை வங்கிகளின் வருவாய்

அரசுடைமை வங்கிகளின் வருவாய் வரும் 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 13 சதவீதமாகக் குறையும். இதுவே சென்ற ஆண்டில் சுமார் 53 சதவீதமாக இருந்தது. உலோகத் துறைகளைப் பொருத்த வரை 2017 ம் ஆண்டின் முதல் காலாண்டின் வருவாய் சுமார் 16 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இதுவே சென்ற ஆண்டில் சுமார் 31 சதவீதமாக இருந்தது.

இரட்டை இலக்க வளர்ச்சி

இரட்டை இலக்க வளர்ச்சி

உள்நாட்டுச் சுழற்சி முறையிலான துறைகளின் வரிக்கு பிந்திய மொத்த வருவாய் சுமார் 11 சதவீதமாக இருக்கும். 8 காலாண்டு மந்த நிலைக்குப் பின்னர் இத்துறை சந்திக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி ஆகும். இதுவே சர்வதேச சுழற்சி முறையிலான துறைகளின் வரிக்கு பிந்திய மொத்த வருவாய் சுமார் 31 சதவீதமாக அதிகரித்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: வருவாய்
English summary

Things to watch out for this earnings season

Things to watch out for this earnings season
Story first published: Thursday, October 20, 2016, 20:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X