தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் இன்று மேம்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றனர் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐடி. இப்படி இருக்க ஐடி துறை கடந்த 6 மாதமாக பல பிரச்சனைகள சந்தித்து வருகிறது.
பெங்களுரூ: ஐடித்துறை இந்தியாவிற்குள் வந்த நாள் முதல் இளைஞர்களுக்கு இதன் மீதான ஈர்ப்பு எள் அளவும் குறையவில்லை என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்படப்போவதாகவும் செய்திகளும் கணிப்புகளும் கூறுகிறது.
இதைப்பற்றிச் சரியான தகவல் மற்றும் இந்திய ஐடி நிறுவனங்களின் உண்மையான நிலையைப் பற்றி யாரிடம் கேட்பது..?
இந்திய மென்பொருள் துறையில் நிலையான வளர்ச்சி அடைந்து இன்று மிகமுக்கிய இடத்தில் இருக்கும் நிறுவனம் 'இன்போசிஸ்'. இந்நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்கா தான் இதற்கான பதிலை சமாணிய மக்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கு, சந்தை வல்லுநர்களுக்கும் சொல்லப் போகிறார்.
சிக்கா என்ன ஆச்சு..
6 மாதம் முன்பு கூட ஐடி துறை இந்திய பொருளாதாரத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போது வர்த்தகத்திற்காகவும், இருக்கும் வர்த்தகத்தை, வேலையையும் தக்கவைத்துக்கொள்ளவும் நிறுவனங்களும், ஊழியர்களும் போராடும் நிலைக்கு வந்துவிட்டு இந்திய ஐடி துறை. அப்படி என்னதான் ஆச்சு..?
விஷால் சிக்கா
இந்திய ஐடி துறை தனது அடிப்படையை மாற்றி வருகிறது, இதன் மாற்றங்கள் வெளியில் தெரியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சேவைக்கான விலை நிலைகள் குறைப்பு, நிறுவனங்கள் மத்தியிலான விலை போர், அதிக வேறுபாடு, அதிரடி செலவு குறைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இந்திய மாற்றத்தில் கடந்த 2 வருடங்களாக இந்திய ஐடி நிறுவனங்கள் கூறும் ஓரே பதில் இந்தச் சரிவை தவிர்க முடியாத ஒன்று. என்று தான்.
மீட்சி
இந்தச் சரிவில் இருந்து தப்பிக்கவே இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடங்களாக ஆட்டோமேஷன் மற்றும் இன்னோவேஷன் என்ற இரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆட்டோமேஷன்
ஆட்டோமேஷன் மூலம் ஐடித்துறையில் மெக்கானிக்கலாகச் செய்யப்பட்டும் அனைத்துப் பணிகளையும் ஆட்டோமேட் செய்வது தான், அதற்குச் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் உதவும்.
இத்தகைய மாற்றம் இந்திய ஐடத்துறைக்கு மிகவும் கடினமானது என்றும் விஷால் சிக்கா கூறியுள்ளார்.
கார்ப்பரேட் ஐடியா
இதனால் நிறுவனத்தில் செலவுகள் அதிகளவில் குறையும், எனவே வர்த்தகப் பாதிப்பால் ஏற்படும் சரிவுகளை இதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்பதே கார்ப்பரேட் நிறுவனங்களின் ஐடியா.
ஆனால் இதில் அதிகளவில் பாதிக்கப்படப்போவது ஊழியர்கள் தான். அனைத்து வேலைகளையும் ஆட்டோமேட் செய்துவிட்டால் லட்ச கணக்கில் ஊழியர்கள் எதற்கு,? சில ஆயிரம் போதும் தானே.
புதிய வர்த்தகம்
ஐடி நிறுவனங்கள் கையில் எடுத்துள்ள ஆட்டோமேஷன் மற்றும் இன்னோவேஷன் ஆயுதகளுக்கு முக்கியக் காரணம், இதன் மூலம் புதிய துறை அல்லது டெக்னாலஜி சார்ந்த வர்த்தகத்திற்குச் செல்ல முடியும் என்பது. அப்படிப் புதிய துறைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதிகளவிலான நிதி தேவை.
நிதி தேவையைப் பூர்த்திச் செய்ய அதிக லாபம் அளிக்கும் பிரிவில் இருந்து செலவுகளைக் குறைத்து புதிய துறையில் முதலீடு செய்கிறது ஐடி நிறுவனங்கள். இந்த முறையிலான வர்த்தகத்திற்குப் பெயர் தான் கேஷ் கவ் பிஸ்னஸ்.
எங்களுக்கு ரொம்பவும் அதிகம்
இன்போசிஸ் நிறுவனத்தில் கேஷ் கவ் பிஸ்னஸ் சார்ந்த பிரச்சனைகள் மிகவும் அதிகம் எனவும் விஷால் சிக்கா கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தைப் போல் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களில் அதிகம் எனச் சந்தை புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
சவால்
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்தப் பரிமாற்ற வளர்ச்சியில் தான் கடந்த 2 வருடமாக விஷால் சிக்கா பணியாற்றியுள்ளார்.
இந்த 2 வருடப் பணியில் பிபிஓ பிரிவில் பல பிரச்சனைகளைச் சந்தித்ததாகவும், சில முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் விஷால் சிக்கா கூறினார். ஆனால் கோர் பிஸ்னஸ் பரிவில் நிலையான வளர்ச்சியும், வருவாய் அளவுகளில் மிகப்பெரிய மாற்றத்தையும் தான் பார்த்துள்ளதாக விஷால் சிக்கா கூறினார்.
வருவாய் அளவுகள் குறைப்பு
இந்தப் பிரச்சனைகளின் எதிரொலியாகத் தான் விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் அளவீடுகளை 2 முறை குறைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications