'டிசம்பர் 3' தான் கடைசி.. 'ஜியோ'-வின் இலவச சலுகைகள் முடிவுக்கு வருகிறது..!

மும்பை: இந்திய டெலிகாம் துறையில் கால் பதித்த நாள் முதல் இன்று வரை மக்கள் மத்தியில் மவுசு குறையாத ஜியோ, தனது இலவச சலுகைகளை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியுடன் முழுமையாக நிறுந்த முடிவு செய்துள்ளது.

ஜியோ-வின் துவக்கத்தால் பல முன்னணி டெலிகாம் நிறுவனம் ஆடிப்போனது. இந்த வலிமையான சூழ்நிலையில் ஜியோ தனது இலவச சேவையை நிறுத்திவிட்டால் எப்படி ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்களுடனான போட்டியில் வெற்றிபெற முடியும்.

அனைத்தையும் தாண்டி கொடுத்த வாக்குறுதியைக் கூடக் காப்பாற்ற முடியாமல் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ தற்போது நிற்கிறது என்றால், கொஞ்சம் வருத்தமாகத் தான் உள்ளது. அப்படி என்ன வாக்குறுதி கொடுத்தது..?

ஜியோ அறிமுகம்

ஜியோ அறிமுகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் கிளை நிறுவனமான ஜியோ தனது சேவை அறிவிப்பின் போது 3 மாத இலவச சேவையை அளிக்க உள்ளதாக அறிவித்தது.

இதன் படி டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலத்திற்குத் தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முழுமையாக இலவச சேவை அளிக்க வேண்டும்.

ஆனால் ஜியோ தற்போது தனது இலவச சேவைகளை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியே முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

 

ஏன் இப்படி..?

ஏன் இப்படி..?

இந்திய டெலிகம் துறையின் சட்டதிட்டங்கள் படி எந்த ஒரு நிறுவனமானாலும் சரி வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் இலவச திட்டங்களை 90 நாட்களுக்கு அதிகமாக அளிக்கக் கூடாது.

90 நாட்கள்

90 நாட்கள்

ஜியோ தனது சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. இதனால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் இலவச கால்கள், இலவச டேட்டா சேவைகள் என எதையும் பயன்படுத்த முடியாது.

டிராய்

டிராய்

ஜியோ-வின் இலவச சேவைகளுக்கு டிசம்பர் 3ஆம் தேதிதான் கடைசி நாள் என டிராய் அமைப்பு ஜியோ-விற்கு அனுப்பிய கடித்ததில் குறிப்பிடத்தக்கது.

 போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

சந்தையில் ஜியோ-வின் நிறுவனங்கள், டெலிகாம் துறையின் விதிகளை மீறி அதிகளவிலான இலவச சேவைகளை வழங்குகிறது என டிராய் அமைப்பிடம் சில நாட்களுக்கு முன் புகார் அளித்து. ஆனால் டிராய் அமைப்பு இந்த வெல்கம் ஆஃபரில் எவ்விதமான விதிமீறல்கள் இல்லை என தெரிவித்து, புகார் அளித்த முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு பதில் அளித்தது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனத்தின் இந்த அதிரடி இலவச ஆஃபர் மூலமாக மட்டுமே 10 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் பெற்றது. தற்போது இலவசங்கள் நிறுத்தப்பட்டால் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் ஏர்டெல், வோடாபோன் என முன்னணி நிறுவனங்களை நாடி சென்று விடுமோ என்ற அச்சத்தில் உள்ளது ஜியோ.

திட்டங்கள்

திட்டங்கள்

ஆனால் ஜியோ தனது சேவை அறிமுக தினத்தன்று சந்தையில் தற்போது உள்ள கட்டணங்களை விடவும் மிக குறைவான கட்டணத்தில் சேவை அளிப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் மன மாற்றத்தை டிசம்பர் 3ஆம் தேதிக்கு பின் தான் தெரியும். பொறுத்திருந்து பார்போம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+