சீனாவில் பிறந்து வளர்ந்த ஜாக் மா, 1988ஆம் ஆண்டுப் பி.ஏ ஆங்கிலப் பட்ட படிப்பை முடித்துவிட்டு சுமார் 30 இடங்களில் வேலை செய்தார். 30 நிறுவனங்களிலும் இவர் வெளியேற்றப்பட்டார் என்பது தான் இதில் சோகமான விஷயம்.
ஆனால் இவர் தான் இப்போது சீனாவின் ஈகாமர்ஸ் தந்தை..!
பீர்
1994ஆம் ஆண்டு இண்டர்நெட் என்னும் பெயரால் ஈர்க்கப்பட்டு அதன் குறித்து அதிகளவில் படிக்கவும் தெரிந்துகொள்ளவும் துவங்கினர். இவர் இண்டர்நெட்டில் தேடிய முதன் வார்த்தை என்ன தெரியுமா 'பீர்'.
சீனா யெல்லோ பேஜெஸ்
இப்படிப் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்த ஜாக் மா, தனது நன்பர் மூலம் 20,000 டாலரை சேர்த்து ஒரு இண்டர்நெட் சார்ந்த நிறுவனத்தைத் துவங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் பிற நிறுவனங்களுக்கு வெப்சைட் உருவாக்குவதே இவரின் வேலை. ஜாக் மா துவங்கிய முதல் நிறுவனத்தின் பெயர் "China Yellow Pages". 3 வருடத்தில் 800,000 டாலர் தொகை சம்பாதித்துக் காட்டினார் ஜாக் மா. தோல்வி கற்றுக்கொடுத்த பாடம்.
அலிபாபா துவக்கம்
1999ஆம் ஆண்டு ஜாக்மா தனது திறன்வாய்ந்த குழுவுடன் 'அலிபாபா' என்னும் ஈகாமர்ஸ் தளத்தில் துவங்கினார். இக்குழுவில் 17 பேர் இருந்தனர்.
25 மில்லியன் டூ 25 பில்லியன் டாலர்
துவக்கம் முதல் அலிபாபா சீன சந்தையில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது, ஜனவரி 2000ஆம் ஆண்டு 25 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்று 2014ஆம் ஆண்டு அமெரிக்கப் பங்குச்சந்தையில் குதிக்கும் போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு எவ்வளவும் தெரியுமா 25 பில்லியன் டாலர்.
9 முக்கியப் பிரிவுகள்
அலிபாபா குரூப் கீழ் சுமார் 9 முக்கிய வர்த்தகப் பிரிவுகள் உள்ளது இவை Alibaba.com, Taobao Marketplace, Tmall, eTao, Alibaba Cloud Computing, Juhuasuan, 1688.com, AliExpress.com மற்றும் Alipay ஆகியவை ஆகும்.
ஈகாமர்ஸ் தந்தை
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு அலிபாபா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த போது அமெரிக்கா சந்தையில் ஆட்சி செய்திருந்த அமேசான்.காம் நிறுவனம் மிகப்பெபிய ஆடம் கண்டது. இன்று வரை அமேசான் அலிபாபா தாக்கத்தில் இருந்து மீள முடிவில்லை.
இதன் பின்னர்த் தான் சீனாவின் ஈகாமர்ஸ் தந்தை என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா-வின புகழ் உலகம் முழுவதும் பரவியது.
வெற்றிக்கு வழி..
ஜாக் மா கூறும் வெற்றிக்கான பத்து வழிகள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications