இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனத்தை ஒப்பிடும்போது.. 'விப்ரோ' ரொம்ப மோசம்..! - ஸ்பீக்கர் பாக்ஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றும் 'விப்ரோ'..!
 

அமெரிக்க நிறுவனத்தைக் கைப்பற்றும் 'விப்ரோ'..!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, கிளவுட் சேவையில் சிறந்து விளங்கும் அப்பிரீயோ (Appirio) என்னும் அமெரிக்க நிறுவனத்தை 500 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 3,338 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது.

இந்த டீல் வரும் டிசம்பர் 31,2016க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Wipro #US

சவுதி நாட்டின் விசா கட்டணங்கள் உயர்வு.. வர்த்தகச் சந்தை பாதிக்குமா..?

சவுதி நாட்டின் விசா கட்டணங்கள் உயர்வு.. வர்த்தகச் சந்தை பாதிக்குமா..?

அக்டோபர் மாதத்தில் இருந்து 6 மாத பிஸ்னஸ் அல்லது வொர்க் விசா கட்டணம் 400 ரியால் இருந்து 3,000 ரியாலாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல் ஒரு முறை உள்நுழைய விரும்புவோருக்கான விசா கட்டணம் 2,000 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது.

#Saudi #Riyal

ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்கும் எச்சிஎல்.. புதிய வர்த்தகத்தில் நுழையத் திட்டம்..!

ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்கும் எச்சிஎல்.. புதிய வர்த்தகத்தில் நுழையத் திட்டம்..!

2016ஆம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தை விட அதிக லாப வளர்ச்சி அடைந்த எச்சிஎல் நிறுவனம் பட்லர் அமெகரிக்கா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை 85 மில்லியன் டாலருக்கு வாங்குகிறது.

அமெரிக்காவில் இந்நிறுவனத்திற்கு 900 இன்ஜினியர்கள் மற்றும் 7 டிசைன் சென்டர்களும் உள்ளது.

#HCL

ரீடைல் வர்த்தகத்தைக் குறிவைக்கிறது 'அலிபாபா'..!
 

ரீடைல் வர்த்தகத்தைக் குறிவைக்கிறது 'அலிபாபா'..!

சீன நாட்டைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா உலகளவிலான ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் அதிகளவிலான இடத்தைப் பிடித்த நிலையில், தற்போது அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் 10 மடங்கு அதிக வர்த்தகச் சந்தை கொண்டு இருக்கும் ரீடைல் வர்த்தகத்திற்கு இறங்கத் திட்டமிட்டுள்ளது.

#Alibaba #China

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடம்..!

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, போர்ப்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 22.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலீப் சங்வி (16.9 பில்லியன் டாலர்), ஹிந்தூஜா குடும்பம் (15.2 பில்லியன் டாலர்), அசிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டாப் 5 இடங்களைப் பிடித்தனர்.

#Forbes #Mukesh_Ambani

இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனத்தை ஒப்பிடும்போது.. 'விப்ரோ' ரொம்ப மோசம்..!

இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனத்தை ஒப்பிடும்போது.. 'விப்ரோ' ரொம்ப மோசம்..!

இந்திய மென்பொருள் நிறுவனங்களில் முதல் 5 இடத்தில் இருக்கும் விப்ரோ நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 8 சதவீதம் குறைவான லாபத்தை அடைந்துள்ளது.

இக்காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் கடந்த வருடத்தில் இதே காலாண்டை ஒப்பிடும் போது, 8 சதவீகம் குறைந்து 2,070 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் வருவாய் அளவு 10 சதவீதம் உயர்ந்து 13,770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

#WiproQ2

 சீனா 'நோ' சொன்னதால் 40% வர்த்தகம் பாதிப்பு..!

சீனா 'நோ' சொன்னதால் 40% வர்த்தகம் பாதிப்பு..!

தீபாவளி பண்டிகையில் வட மாநிலங்களில் அலங்கார மின் விளங்குகளின் வர்த்தகம் அதிகமாக இருக்கும். இதனால் இக்காலகட்டத்தில் சீனாவில் இருந்து அலங்கார மின்விளக்குகள் அதிகளவில் குவியும்.

தற்போது இந்திய வியாபாரிகள் சீனா பொருட்களின் விற்பனைக்குத் தடை வித்துள்ளதால் ஜெய்பூரில் மட்டும் அலங்கார மின் விளங்குகளின் வர்த்தகம் சுமார் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெய்ப்பூர் வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.

#China

இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தி 6 சதவீதம் உயர்வு..!

இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தி 6 சதவீதம் உயர்வு..!

உலகளவில் ஸ்டீல் உற்பத்தி குறைந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டங்களில் சுமார் 6 சதவீதம் அதிகமான உற்பத்தியைச் செய்துள்ளது. இந்த 9 மாத காலகட்டங்களில் இந்தியா மட்டும் சுமார் 71.09 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் மொத்த உற்பத்தி அளவு 825.9 மில்லியன் டன், இது கடந்த வருடத்தை விட 0.6 சதவீதம் அதிகமாகும்.

#Steel

தங்கம் விலை கிராமிற்கு 2 ரூபாய் சரிவு

தங்கம் விலை கிராமிற்கு 2 ரூபாய் சரிவு

சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் குறைந்து 2,827 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து 3,023 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

#Gold

வெள்ளி விலையில் சரிவு.. ஆனால் வர்த்தகம் குறைவு

வெள்ளி விலையில் சரிவு.. ஆனால் வர்த்தகம் குறைவு

சென்னையில் இன்று 1 கிலோ பார் வெள்ளியின் விலை 2,366 ரூபாய் குறைந்து 42,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

#Silver

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds - GoodReturns-Tamil - 21102016

News in 30 seconds - GoodReturns-Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X