கடந்த இரண்டு வருடங்களாக 15 பங்குகள் 24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இது வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு நிதி கணக்குகளை விட அதிகம்.
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக 15 பங்குகள் 24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இது வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு நிதி கணக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மே 2014 முதல்
நிப்டி க்ரோத் 15 மற்றும் என்எஸ்ஈ டிராக்கிங் 15 தரவுகளின் படி மே 2014 முதல் 24.4 சதவீதம் வரை சில துறை சார்ந்த பங்குகள் மட்டும் லாபம் அளித்துள்ளன.
இதே மே மாதம் தான் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் சில நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆடோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அடுத்த நிலையில் உள்ளன.
ஈச்சர் மோடார்ஸ்
ஈச்சர் மோடார்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 2014,மே 22 ஆம் தேதி 7,305 ரூபாயாக இருந்தது இதுவே இப்போது 25,800 ரூபாயாக 253 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது.
153 முதல் 53 சதவீதம் வரை உயர்ந்த பங்குகள்
மாருதி சூஸிகி நிறுவன பங்குகள் 153 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 126 சதவீதமும், லூபின் நிறுவனப் பங்குகள் 60 சதவீதமும், எச்யூஎல் நிறுவனப் பங்குகள் 53 சதவீதமும் இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளன.
ஐடி நிறுவனங்கள்
2014 மே மாதத்துடன் ஒப்பிடும் போது விப்ரோ நிறுவனம் அப்போது இருந்ததை விட 1 சதவீதம் விலை குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை இந்த 31 மாதத்தில் மட்டும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவனங்கள் முறையே 22 மற்றும் 35 சதவீதம் உயர்ந்துள்ளன.
நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications