அமேசான் உடன் மல்லுகட்டும் பிளிப்கார்ட் உயர் அதிகாரி.. என்ன பிரச்சனை..?

பெங்களுரூ: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சில நாட்களுக்கு முன் பிக் பில்லியன் டேஸ் எனப்படும் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. இந்த மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை திட்டத்திற்குத் தலைவராகக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி-ஐ பிளிப்கார்ட் நிர்வாகம் நியமிக்கப்பட்டது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்த அதேபோன்ற தள்ளுபடி விற்பனையை அமேசான், ஸ்னாப்டீல் போன்ற முன்னணி நிறுவனங்களும் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தோல்வியில் முடிந்துள்ளது. இதன் எதிரொலியாக அமேசான் நிறுவனத்தை விடவும் அதிகமான வர்த்தகத்தைப் பெற வேண்டும் எனக் களத்தில் குதித்துள்ளார் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி.

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தனது முதலீட்டின் மூலம் மறைமுகமாகக் கட்டுக்குள் வைத்திருக்கும் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, பிளிப்கார்ட் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்த பணிகளின் ஒரு பகுதியாக நிறுவனத்திற்குள் உயர் நிர்வாகத் தலைவராகக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நுழைந்தார்.

பிக் பில்லியன் டேஸ்

பிக் பில்லியன் டேஸ்

சந்தையில் அமேசான் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு கல்யாண், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையைக் கடந்த 3 மாதமாகப் படிப்படியாகத் திட்டமிட்டு வந்தார்.

தலைவன் பிளிப்கார்ட்

தலைவன் பிளிப்கார்ட்

பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு முன் இதுகுறித்து நிர்வாகத் தலைவர்கள் மத்தியிலான கூட்டத்தில் கல்யாண் பேசும்போது, இந்த விற்பனை திட்டத்தின் முடிவில் சந்தையில் யாரும் நம்மைத் தகர்க்க முடியாத தலைவனாக இருக்கப்போகிறோம் என்று கூறினார்.

அதுமட்டும் அல்லாமல் தொழில்நுட்ப அளவிலும், சிறந்த தள்ளுபடி திட்டங்கள், விநியோகம் என அனைத்தையும் ஆய்வு செய்துள்ளோம். கோளாறு ஏற்படவும், தோல்வி அடையவும் எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை எனவும் கூறினார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன..?

 

உண்மை..

உண்மை..

இத்தள்ளுபடி விற்பனையின் துவக்கத்திலும், 2வது நாளில் சில நிமிடங்கள் பிளிப்கார்ட் இணையத் தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.

மேலும் இயல்பான வர்த்தக நாளை ஒப்பிடும் போது பிக் பில்லியன் டே விற்பனையில் ஒருநாளுக்கு வெறும் 30 சதவீதம் அதிகமான வர்த்தகத்தை மட்டுமே பெற்ற பிளிப்கார்ட்.

ஆனால் பிளிப்கார்ட் நிறுவனம் தான் நிர்ணயம் செய்த இலக்கை எட்ட முடியாமல் அமேசான் உடனான போட்டியில் தோல்வி அடைந்துள்ளாகப் பிளிப்கார்ட் உள் ஆய்வுகள் கூறுகிறது.

 

அமேசான் தான் இலக்கு

அமேசான் தான் இலக்கு

சந்தையில் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது எப்படி என்பதைப் பார்க்காமல் பிளிப்கார்ட் சந்தையில் நிலவும் போட்டியில் அமேசான் நிறுவனத்தை எப்படித் தோற்கடிப்பது என்பதை முக்கியக் கருத்தாகக் கொண்டு இருக்கிறது.

இதில் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி ஒரு படி மேல்.

 

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி

பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி மற்றும் நிர்வாகக் குழுவின் தலைவரான கல்யாண் கிருஷ்ணமூர்த்திச் சந்தையில் நிலவும் போட்டியில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாளராக அமேசான் நிறுவனம் தான் என வெளிப்படையாகச் சொல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

ஸ்மார்ட்போன் விற்பனை

ஸ்மார்ட்போன் விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனம், ஸ்மார்ட்போன் விற்பனையில் சில முக்கிய நிறுவனங்களை மட்டுமே தனது முக்கிய வாடிக்கையாளராகக் கொண்டிருந்த நிலையில் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மூலம் அமேசான் நிறுவனத்தில் இருந்த பல மொபைல் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்தார்.

அதேபோல் வீட்டு பொருட்களிலும் இதே நிலை தான்.

 

அடுத்தக் கட்ட திட்டம்..

அடுத்தக் கட்ட திட்டம்..

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தை எட்ட முடியாமல் கைவிட்ட சில முக்கிய வர்த்தகப் பிரிவுகளை அமேசான் உடன் போட்டி போடும் வகையில் மீண்டும் கொண்டு வர கல்யாண் கிருஷ்ணமூர்த்தித் திட்டமிட்டுள்ளார்.

இதில் பேஷன் மற்றும் பர்னீசர் பொருட்களும் அடக்கம்.

 

எப்எம்ஜிசி..

எப்எம்ஜிசி..

டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய அதிகளவிலான வர்த்தகத்தை எதிர்பார்ப்பதாகவும், 2017ஆம் ஆண்டில் எப்எம்ஜிசி பிரிவில் தாங்கள் இறங்க உள்ளதாகவும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 3 தலைவர்கள் கூறியுள்ளனர்.

பிக் பேஸ்கட்

பிக் பேஸ்கட்

அமேசான் நிறுவனத்தின் கிரானா ஸ்டோர், பிக் பேஸ்கட், பிக் பஜார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் எப்எம்ஜிசி பிரிவில் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிளிப்கார்ட்.

 

 

புதிய முதலீடு

புதிய முதலீடு

இப்புதிய திட்டங்கள் மூலம் அடுத்த 6 மாதங்களில் நடக்க உள்ள முதலீடு கூட்டத்தில் வால்மார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீட்டை அதிகளவில் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+