இன்று சென்செக்ஸ 88 புள்ளிகள் சரிவில் முடிந்தது..!

செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் குறைவான புள்ளிகளுடன் முடிவடைந்தது.

மும்பை: செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் குறைவான புள்ளிகளுடன் முடிவடைந்தது, இதில் முக்கியமாக டாடா குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி வெளியேறியதனால் நிறுவனத்தின் பங்குகள் பெறும் சரிவை சந்தித்தது.

இன்று சென்செக்ஸ 88 புள்ளிகள் சரிவில் முடிந்தது..!

பங்குச் சந்தை துவங்கும் போது ஏற்றத்துடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை பங்குச் சந்தை 87.66 சரிந்து 28,091.42 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 117.65 புள்ளிகள் சரிந்து 8,691 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஐடி துறை பங்குகள் 0.84 சதவீதம் சரிவுடனும், நுகர்பொருட்கள் துறையின் பங்குகள் 0.83 சதவீதம் சரிவுடனும், டெக் துறைகள் 0.56 சதவீதம் சரிவுடனும், மூலதன பொருட்கள் துறை பங்குகள் 0.53 சதவீதம் சரிவுடனும் வர்த்தகம் ஆனது.

மறு பக்கம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குறியீடுகள் 0.56 சதவீதம் உயர்வுடனும், சுகாதார துறை சார்ந்த குறியீடுகள் 0.46 சதவீதம் உயர்வுடனும், நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீடுகள் 0.46 சதவீதமும், வங்கி குறியீடுகள் 0.25 சதவீதமும் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்த்த நிறுவனப் பங்குகள் என்றால் அதானி துறைமுகங்கள் (+ 9.43%)ர், டாக்டர் ரெட்டிஸ் (+ 3.59%), ஐசிஐசிஐ வங்கி (+ 1.6%), ஆக்சிஸ் வங்கி (+ 1.49%), பார்தி ஏர்டெல் (+ 1.48%), முக்கிய இழப்பைச் சந்தித்த நிறுவனங்கள் எம் & எம் (-2.72%), டாடா ஸ்டீல் (-2.51%), கெயில் (-2.02%), எச்யூஎல் (-2.00%) மற்றும் ஓஎன்ஜிசி (-1.3%) ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+