பங்குச் சந்தை துவங்கும் போது ஏற்றத்துடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பங்குச் சந்தை துவங்கும் போது ஏற்றத்துடன் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை பங்குச் சந்தை 133.52 சரிந்து 28,053 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 37.95 புள்ளிகள் சரிந்து 8,671 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

காலை 10:20 நிலவரப்படி மணப்புரம் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6.35 சதவீதம் உயர்வுடனும், எஸ்ஜேவிஎன் நிறுவனப் பங்குகள் 4.25 சதபீத உயர்வுடனும், முத்தூட் ஃபினான்ஸ் நிறுவனப் பங்குகள் 1.75 சதவீத உயர்வுடனும், அபான் ஆஃப்ஷோர் பங்குகள் 1.63 சதவீதத்துடனும் வரித்தகம் ஆகி வருகின்றன.
ஜிஎஸ்எப்சி நிறுவனப் பங்குகள் 5.69 சதவீதம் சரிவுடனும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 4.48 சதவீத சரிவுடனும், என்எல்சி இந்தியா நிறுவனப் பங்குகள் 3.48 சதவீத சரிவுடனும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இன்றைய முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பங்குகளாக டாடா குழுமத்தின் பங்குகள், ஐடியா செல்லுலார், கார்ப்ரேஷன் வங்கி, பிஎன்பி ஹவுஸிங் ஃபினான்ஸ், ஓஎன்ஜிசி, முத்துட் கேப்பிடல் சர்வீசஸ், பார்தி இன்ஃப்ராடெல், இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், ஜிடிஎக் இன்ஃப்ரா, டாடா மெடாலிக்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், அதானி டிரான்ஸ்மிஷன்,சாஸ்கின் கம்யூனிகேஷன் டெக்னாலஜிஸ், மகேந்திரா சிஐஈ ஆகிய பங்குகள் எனக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க:


Click it and Unblock the Notifications