தீபாவளி ஆஃபர் அறிவித்தது ஜெட் ஏர்வேஸ்: 921 ரூபாயில் சென்னை-கோயம்புத்தூர் விமான பயணம்..!
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இந்த ஆஃபர் டிக்கெட்கள் அனைத்தும் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு மட்டும்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 'டீல் வாலி திவாளி' என்ற பெர்யடில் விமான டிக்கெட் கட்டணத்தை 921 ரூபாய்க்கு அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இந்த ஆஃபர் டிக்கெட்கள் அனைத்தும் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு மட்டும் அதுவும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் ஆகும்.
இந்தத் தீபாவளி ஆஃபரில் அக்டோபர் 30 வரை விமான டிக்கெட்களை நீங்கள் புக் செய்துகொள்ளலாம். இந்த டிக்கெட் விலைகளில் நீங்கள் டிக்கெட் புக் செய்யும் தினத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் பயணம் செய்யலாம்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கும் போது 921 ரூபாய்க்குச் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லலாம். இந்த ஆஃபர் டிக்கெட்கள் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே. ஆனால் எத்தனை டிக்கெட்கள் இந்த ஆஃபர் விலையில் கொடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications