பங்குச் சந்தை இன்றைய(26/10/2016) நிலவரம்.
மும்பை: புதன்கிழமையான இன்று செவ்வாய்க்கிழமையை விட மோசமான நிலையில் 211 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது இந்திய பங்குச்சந்தை.

உலகளாவிய பங்குச் சந்தை குறியீடுகள் பலவீனமாக இருப்பதினால் ஆசிய பங்குச் சந்தை சரிவில் உள்ளது என்று கூறப்படுகிறது.
காலை 10:50 நேரப்படி மும்பை பங்குச் சந்தை குறியிடு 220 புள்ளிகள் சரிவுடன் 27,870.42 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை 57.15 புள்ளிகள் சரிவுடன் 8,634 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 4.71 சதவீதமும், பிஐ நிறுவனங்களின் பங்குகள் 4.37 சதவீதமும், மகேந்திரா அண்ட் மகேந்திரா ஃபினான்ஸ் நிறுவனப் பங்குகள் 4.12 சதவீதம் உயர்வுடன் உள்ளது.
அதே நேரம் வங்கிகளின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. ஆக்ஸிஸ் வங்கி 7.45 சதவீத சரிவுடனும், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 3.39 சதவீதமும், டாடா மொட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 2.01 சதவீதம் சரிவுடனும் காணப்படுகின்றன


Click it and Unblock the Notifications