புதிய தலைவர் பொறுப்பேற்கும் வரை ரத்தன் டாடா இனைக்கால தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
மும்பை: சைரஸ் மிஸ்ட்ரி டாடா நிறுவனத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து அரை டஜன் நம்பர்கள் இந்த பதிவுக்காக பரிசீலனையில் உள்ளனர்.
புதிய தலைவர் பொறுப்பேற்கும் வரை ரத்தன் டாடா இனைக்கால தலைவர் பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து தான் இடைக்கால பொறுப்பேற்றுள்ளதை பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே நாம் அடுத்து இந்தப் பதவிக்கு யாரெல்லாம் வர வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலை பார்ப்போம்.
இந்திரா நூயி
மிஸ்ட்ரியின் பதிவுக்கான பட்டியலில் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திரா நூயி ஒருவராக உள்ளார்.
உலகின் இரண்டாம் மிகப் பெரிய உணவு மற்றும் குளிர்பான நிறுவனத்தைத் திறம் பட நடத்தி வருபவர் இந்திரா நூயி. மேலும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் 100 பட்டியலை ஃபேர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டபோது அதில் இவரும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் சந்திரசேகரன்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள என் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் இளைமையான தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.
ஆர்பிஐ இவரை 2016 ஆண்டு அதன் போர்டு இயக்குநர் பதவியை இவருக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஐடி துறை ஆளுநர்களின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2015-2016 ஆம் ஆண்டு நாஸ்காம் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இஷ்ஹாத் ஹுசைன்
டாடா நிறுவனத்தின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் உள்ள இஷ்ஹாத் ஹுசைன் சரியான தேர்வு தான். அவர் நிதி மேலாண்மை நிபுணத்துவம் மற்றும் ஒட்டுமொத்த மேலாண்மை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு போன்றவற்றில் சிறப்பானவர். பத்மபூஷன் விருதும் இவர் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் சரின்
வோடாஃபோன் நிறுவனத்தின் முன்னால் தலைமை செயல் அதிகாரியான அருண் சரினும் பட்டியலில் உள்ளார். 2003 முதல் 2008 ஆண்டு வரை சரின் வோடாஃபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றினார்.
ஆசிய மற்றும் ஆப்ரிக்கா சந்தையில் இவரின் தொழில் திறன் மற்றும் முடிவுகள் சிறப்பாக அமைந்துள்ளது.
சிஸ்கோ சிஸ்டம்ஸ், ஓலா கேப்ஸ், பிளாக்ஹாக் நெட்வொர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் குழுவில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்
அமித் சந்திரா
பேயின் கேப்பிடல் இந்தியாவின் தலைவராக உள்ள அமித் சந்திரா டாடா குழுமத்தின் நெடுந்தூர திட்டங்களுக்கான சரியான தேர்வில் இவரும் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார்.
பி முத்துராமன்
டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரான முத்து ராமனும் இந்தப் பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications