10 குவாட்டர் வாங்கினால் 1 குவாட்டர் 'இலவசம்'.. பிளிப்கார்ட், அமேசான்-ஐ மிஞ்சும் வியாபார உத்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த வாரம் டீ கடையில் அளிக்கப்படும் 30 நிமிட இலவச இண்டர்நெட் மூலம் அதன் உரிமையாளர் பெறும் அதிகளவிலான வியாபாரத்தைப் பற்றிப் பார்த்தோம். பல வாசகர்கள் இந்த முயற்சியைப் பாராட்டினார்கள்.

 

அந்த வகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மதுபான கடை புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், தனது வியாபாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகை கடை, துணிக்கடை, பட்டாசு கடை, எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தான் அதிரடி ஆஃபரை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று விநோதம்..

வானவில் பார்

வானவில் பார்

தேனி மாவட்டம், சின்னமனூர் சேர்ந்த வானவில் பார் என்ற மதுபான கடை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரை வழங்கியுள்ளது.

அந்த ஆஃபரை அப்பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்துள்ளது இந்த வானவில் பார். அப்படி என்ன ஆஃபர்.

அதிரடி ஆஃபர்

அதிரடி ஆஃபர்

வாட்ஸ்அப்-இல் பகிரப்பட்ட அந்தப் போஸ்டர் புகைப்படத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 குவாட்டர் வாங்கினால் 1 குவாட்டர் இலவதம், 10 பீர் வாங்கினால் 1 பீர் இலவசம், 5 குவாட்டர் வாங்கினால் 1 கட்டிங் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 5 வகையான சைடிஸ் இலவசம் என்றும் வானவில் பார் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இடம்
 

இடம்

இந்த வானவில் பார் தேனி மாவட்டம், சின்னமனூர், நேதாஜி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளதாகவும் இந்த விளம்பர போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

பொதுவாகத் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து வர்த்தகப் பிரிவினரும் தள்ளுபடிகளை வாரி வழங்குவது இயல்பு. ஆனால் இம்முறை இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிரடியான தள்ளுபடிகள் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

வாட்ஸ்அப் பகிர்வு

வாட்ஸ்அப் பகிர்வு

வானவில் பார் குறித்த வாட்ஸ்அப் பகிர்வில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களை விடவும் இந்த ஆஃபர் சூப்பராக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

 வியாபார உத்தி

வியாபார உத்தி

இன்றைய நிலையில் அனைத்துத் தரப்பினரும் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளப் பல புதிய வியாபார உத்திகளை வகுத்து வருகின்றனர் அதில் டீ கடையில் இலவச இண்டர்நெட், இப்போது மதுபான கடையில் ஆஃபர் ஆகியவை அடங்கும்.

 மது ஒழிப்பு

மது ஒழிப்பு

தமிழகம் முழுவதும் தற்போது மது ஒழிக்க 'வேண்டும்' என்று கருத்து நிலவும் நிலையில் வானவில் பார் அளித்துள்ள இந்த ஆஃபர் குறித்து மக்களின் கருத்து வரவேற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buy 10 quarters get 1 free: Vanavil bar offers

Buy 10 quarters get 1 free: Vanavil bar offers - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X