இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8% உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2013-14 கணக்கெடுப்பு ஆண்டில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.6 கோடியாக இருந்தது. இதே 2014-15ஆம் ஆண்டு 8 சதவீதம் உயர்ந்து 3.9 கோடியாக உயர்ந்துள்ளது.

 

இதன் மூலம் ஒரு ஆண்டு இடைவேளையில் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அல்லது வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

 
இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8% உயர்வு..!

அதேபோல் வருமான வரியாக வசூல் செய்யப்படும் தொகை 3,93,918 கோடி ரூபாயில் இருந்து 13 சதவீதம் உயர்ந்து 4,46,719 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

3,50,000 ரூபாய்க்குக் குறைவாக வருமான உடையோர் எண்ணிக்கை 2013-14ஆம் ஆண்டில் 64 சதவீதமாக இருந்த நிலையில் 2014-15ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2013-14ஆம் கணக்கெடுப்பு ஆண்டில் 500 கோடி ரூபாயாக்கும் அதிகமான வருமானம் உடையோர் எண்ணிக்கை 206ஆக இருந்த நிலையில் 2014-15ஆம் ஆண்டு 182 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Payees Up 8% in AY13-14

Income Tax Payees Up 8% in AY13-14 - Tamil Goodreturns
Story first published: Thursday, October 27, 2016, 15:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X