டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, போன்ற முன்னணி நிறுவனகளின் வளர்ச்சி காரணிகள் பாதிப்பு.. நாஸ்காம் வெளியிட்டுள்ள கணிப்புகளால் ஒட்டுமொத்த ஐடி துறையே சோகத்தில் முழ்கியுள்ளது.
2017ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுகளை மென்பொருள் துறை அமைப்பான நாஸ்காம் குறைத்துள்ளது.
143 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய மென்பொருள் துறை 2017ஆம் ஆண்டில் 10-12 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதன் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துள்ளது நாஸ்காம்.
பிரச்சனை
தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் சந்தித்து வரும் மேக்ரோஎக்னாமிக் மற்றும் நிலையற்ற தன்மை போன்ற பிரச்சனைகள் மூலம் இந்தியாவில் சில முன்னணி ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் ஒன்றை இலக்க அளவுகளில் மட்டும் இருக்கும் எனவும் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
இந்நிலையில் நாஸ்காம் இதுகுறித்து எந்த நிறுவனத்தின் பெயரையும் வெளியிடவில்லை.
மந்தமான காலாண்டு முடிவுகள்
சந்தையில் தற்போது டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மந்தமான காலாண்டு முடிவுகளை அறிவித்து இத்துறையின் வளர்ச்சியைக் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆர்.சந்திரசேகர்
காக்னிசென்ட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிடாத நிலையில் எவ்விதமான முடிவுகளையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.
இந்நிறுவனங்கள் அடுத்தச் சில நாட்களில் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில் மென்பொருள் துறையின் சரிவை குறைக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்தார்.
இன்போசிஸ்
இன்றைய சூழ்நிலையின் இந்திய மென்பொருள் ஏற்றமதியில் 2வது இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் 2017ஆம் நிதியாண்டின் துவங்கியதில் இருந்து சுமார் 2 முறை தனது வளர்ச்சி அளவுகளைக் குறைத்துள்ளது. இதுவே தற்போது இத்துறை மீதான வளர்ச்சி காரணிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது.
இந்திய ஐடி துறை
இந்நிலையில் அடுத்த 6 மாதத்திற்கு இந்திய மென்பொருள் சந்தை வளர்ச்சி எப்படி இருக்கும் எனக் கணிக்க முடியாத நிலையில் நாஸ்காம் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போரால் இந்திய உற்பத்தி துறைக்கு பெரிய சிக்கல்!! தனியார் நிறுவனங்களில் மோசமாகும் நிலைமை!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications