நாட்டின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமான ஐடிசி 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 2,500 கோடி ரூபாய் லாபத்தை எட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 10.5 சதவீதம் அதிகமாகும்.
இக்காலக்கட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 7.8 சதவீதம் உயர்ந்து 13,491.4 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
2வது காலாண்டு முடிவுகள் குறித்து ஐடிசி நிறுவனம் கூறுகையில், சந்தையில் சிகரெட் விற்பனையில் இருக்கும் பிரச்சனைகளை தாண்டியும், எப்எம்ஜிசி பிரிவில் ஏற்பட்டுள்ள குறைந்த அளவிலான சந்தை ஈர்ப்பு ஆகியவற்றையும் தாண்டி தொடர்ந்து 2 காலாண்டுகளாக லாபத்தை சந்தித்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

இக்காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் ஜூஸ், காஃபி, மற்றும் சாக்லேட் பொருட்களின் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் ஹோட்டல் வர்த்தகத்தில் 297.3 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான மாற்றமில்லை.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications