தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கிராக்கிப்படி உயர்விற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1, 2016 முதல் தங்களது சம்பளத்தில் கிராக்கிப்படியை 2 சதவீத உயர்த்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்புதலை வியாழக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் அளிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
கிராக்கிப்படி
நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பிறகு இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 7வது சம்பள கமிஷன் பிரிந்துரையின் படி புதிய கணக்கீட்டு முறையுடன் கிராக்கிப்படியில் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு
இப்புதிய மாற்றங்களின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் அளவு 5,622.10 கோடி ரூபாயாக உள்ளது, இதே தற்போது அறிவித்துள்ள படி 8 மாதங்களுக்கு (ஜூலை 2016 - பிப்ரவரி 2017) இதன் அளவு 3,748.06 கோடி ரூபாயாக உள்ளது.
10 லட்சம் பேர்
இதன் மூலம் 50.68 லட்ச மத்திய அரசு ஊழியர்களும், 54.24 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
செயல்திறன் அடிப்படையிலான வெகுமதி
மேலும் நாடாளுமன்ற கூட்டத்தில் 2015-16 முதல் 2017-18ஆம் நிதியாண்டு காலத்திற்கான முக்கியத் துறைமுக ஊழியர் சங்கத்தில் புதிய செயல்திறன் அடிப்படையிலான வெகுமதி (PLR) திட்டத்தை அமல்படுத்தவும் மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
49.58 கோடி ரூபாய்
இதன் மூலம் 37,870 துறைமுக மற்றும் டாக் ஊழியர்கள் பயன்பெற உள்ளது. இப்புதிய திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு 49.58 கோடி ரூபாய் கூடுதல் செலவு.


Click it and Unblock the Notifications