விஜய் மல்லையாவின் சொகுசு ஜெட் விமானம் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளது. யார் வேண்டுமானலும் வாங்கலாம்.
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெயரில் கடன் வங்கிய அதன தலைவரான விஜய் மல்லையா கடனை செலுத்தாமல் லண்டனுக்கு சென்று தற்போது மறைமுகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இந்திய சேவை வரி துறையினருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அளிக்க வேண்டிய 535 கோடி ரூபாய் தொகைக்காக மல்லையாவின் சொகுசு ஜெட் விமானத்தை கைப்பற்றியதுள்ளது.
தற்போது இக்கடன் தொகையை தீர்க்க வேண்டும் என்ற திட்டமுடன் சேவை வரித்துறை இந்த ஜெட் விமானத்தை ஏலம் விட உள்ளது.
ஏலம்
கிங்பிஷர் ஏர்லையன்ஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான ஜெட் ஏர்பஸ் ஏ319 விமானம் தற்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது, இந்த விமானத்தை வாங்க விரும்புவோர் ஏலம் விண்ணப்பங்களை அனுப்பலாம் என மும்பையில் சேவை வரித் துறை அறிவித்துள்ளது.
நவம்பர் 28-29
சேவை வரித்துறையின் விற்பனை ஏஜென்டாக MSTC செயல்பட உள்ளது. இந்த ஏலம் வருகிற நவம்பர் 28-29ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.
தகவல்கள்
இந்நிலையில் ஏலம் விண்ணப்பம் அளிக்க விரும்புவோர் விமானக் குறித்து அதன் செயல்திறன், வசதிகள், அதன் பத்திரங்கள் குறித்த விபரங்களைக் கோரியுள்ளது.
1 கோடி ரூபாய்
ஏலம் விண்ணப்பம் அளிக்க விரும்புவோர் நவம்பர் 27ஆம் தேதிக்குள் 1 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும், அதேபோல் வெளிநாட்டினராக இருந்தால் 1,52,000 அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டும் எனச் சேவை வரித்துறை பெயரில் MSTC தெரிவித்துள்ளது.
தோல்வி
இந்த ஜெட் விமானத்தை இரண்டு முறை விற்பனை செய்ய முயன்றும் குறைந்த தொகைக்கு ஏலம் கோரப்பட்டதால் இதனை வைவிட்டது சேவை வரித் துறை.
9,000 கோடி கடன்
விஜய் மல்லையா கிங்பிஷர் நிறுவனத்தின் பெயரில் சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளார். தற்போது அவர் பிரிட்டன் நாட்டில் வாழ்வதாக நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications