வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு மூலம் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை வரலாறு காணாத உயர்வை எட்டி லாபத்தை புதிய உயர்வுக்கு ஈட்டுச்சென்றது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி வரலாறு காணாத லாப உயர்வைச் சந்தித்துள்ளது. 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை சிறப்பாக இருந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 60.18 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதனால் ஜூன்-செப்டம்பர் 2016ஆம் காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் சுமார் 2,398 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது.

இந்நிறுவனத்தை 60.18 சதவீத லாப உயர்விற்கு முக்கியக் காரணம் மாருதி சுசூகி கடந்த 6 மாதத்தில் அறிமுகம் செய்த அனைத்து தயாரிப்புகளும் வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு 29.28 சதவீதம் உயர்ந்து 20,296.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் இதன் அளவு 15,699.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் மட்டும் சுமார் 3,60,402 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது இது வரலாறு காணாத அளவிலான உயர்வாகும்.


Click it and Unblock the Notifications