டாடா குழுமத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நிறுவனத்தை அமேசான் வங்குகிறது.
அமெரிக்கவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அமேசான், டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனமான வெஸ்ட்லேண்டு நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கைப்பற்றுதல் மூலம் அமேசான் நிறுவனம் தனது பேப்பர் மற்றும் டிஜிட்டல் வடிவிலான புத்தகம் விற்பனையை பல மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும் வெஸ்ட்லேண்டு நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளிலும் வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வெஸ்ட்லேண்டு நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி எழுத்தாளர்கள் வரை அனைவரையும் அமேசான் நிறுவனம் பெற உள்ளது.
டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிரென்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வெஸ்ட்லேண்டு நிறுவனம் உள்ளது.
2016ஆம் ஆண்டு துவக்கத்தில் அமேசான் நிறுவனம் சுமார் 26 சதவீத பங்குகளை கைப்பற்றியது. தற்போது இந்நிறுவனத்தை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications