லாபத்திலும் வருவாயிலும் தொடர் உயர்வு.. அசரவைக்கும் ஏய்ச்சர் மோட்டார்ஸ்..!
நாட்டின் முன்னணி கனரக மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏய்ச்சர் மோட்டார்ஸ் 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் பெற்ற அதிகளவிலான வர்த்தகத்தை பெற் காரணத்தினால் லாபத்தில் 52 சதவீத உயர்வும், வருவாயில் 35 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையிலும் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 52 சதவீதம் உயர்ந்து 254 கோடியில் இருந்து 388 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவும் 35 சதவீதம் உயர்ந்து 1,468 கோடி ரூபாயில் இருந்து 1,981 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications