லாபத்தில் 17% உயர்வு.. கலக்கும் வேதாந்தா நிறுவனம்..!
நாட்டின் முன்னணி கணிம வள நிறுவனமான வேதாந்தா, 2017ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் 1,252 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது.
இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 17 சதவீதம் அதிகமாகும். 2015ஆம் நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் 1,069 கோடி ரூபாயாக இருந்தது.

வேதாந்தா நிறுவனத்தின் லாப அளவுகள் உயர்ந்தாலும் வருவாய் அளவு சுமார் 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 16,340 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவு 2016ஆம் ஆண்டின் ஜூலை - செப்டம்பர் வரையிலான காலத்தில் 15,666 கோடி ரூபாயாக குறந்துள்ளது.
இந்த தரவுகள் அனைத்தும் வரிக்கு, வட்டிக்கு பின்னான தொகையாகும்.
மேலும் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 1.75 ரூபாய் ஈவுத்தொகை அளிக்கவும் இந்நிறுவனத்தின் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications