இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்துடன் நேர் எதிரில் போட்டி போடும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைவர் ரிஷி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் முன்னணி சமுக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் ரிஷி ஜெட்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் டிவிட்டர் நிறுவனத்திடம் இருந்து முழுமையாக வெளியேற உள்ளார் ரிஷி.
டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரிஷி ஜெட்லி தனது ராஜினாமா பற்றி டிவிட்டரிலேயே டிவிட்டியுள்ளார்.
ரிஷி ஜெட்லி
டிவிட்டரில் இருந்து வெளியேறிய பிறகு தான் சிகாகோ செல்வதாகவும் ரிஷி ஜெட்லி கூறியுள்ளார். என்னுடயை தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக நான் சிகாகோ செல்ல உள்ளேன்.
இந்தியா மற்றும் ஆசியாவில் நான் செலவழித்த காலம் என்னை முந்தைய மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் வரையிலான அனுபவத்தை அளித்தது எனவும் கூறினார்.
மேலும் தனது வெளியேற்றம் குறித்து அவர் டிவிட்டர் பதிவில் கூறியவற்றை இப்போது பார்போம்.
புகைப்படம்: லைவ்மின்ட்
4 வருட பணிக்காலம்
இந்தியா மற்றும் ஆசிய பகுதிகளில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தில் 4 வருடம் பணியாற்றிய பின் இதே துறையில் புதிய வாய்புகளை தேடி செல்ல திட்டமிட்டுள்ளதை இன்று நான் உங்களுடிம் பகிர உள்ளேன்.
வாழ்நாள் அனுபவம்
டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவை கட்டமைப்பதிலும், தலைமை தாங்குவதிலும், டிவிட்டர் மீடியா-வை ஆசியா, பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொண்டு சென்றதில் நான் வாழ்நாள் நிர்வாக அனுபவத்தை பெற்றேன் என்று அடுத்த டிவிட்டர் பதிவில் ரிஷி தெரிவித்தார்.
பாலம்
நான் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும், மக்கள்/பயனாளர்களை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுப்படும் இடத்தில் நான் இருப்பேன்.
நாடுகளும்.. குறிக்கோளும்..
என்னுடைய குறிக்கோள் நிறைவேற்றும் பாலத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் வளரும் நாடுகள் பற்றி அதிகளவில் கவனத்தில் கொள்வேன் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
வாழ்கைக்கு அர்த்தம்..
தினமும் இந்தியா, ஆசிய பசிபிக், மத்திய கிழக்கு அணிகள் என்னை ஊக்குவித்தாலும், டிவிட்டர் இந்தியா, பிரதிக்ஷா ராவ், அனீஷ் மதானி, ரஹீல் குருஷித் ஆகியோர் சிறப்பு அர்த்தத்தை கொடுத்தனர்.
புதிய சந்தைகள்
என் அணி டிவிட்டர்-இன் புதிய திட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை புதிய சந்தைக்கு எடுத்து சென்றுள்ளது பெருமிதமாக உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications