தீபாவளி ஸ்பெஷல்: சீனாவிற்கு இந்தியர்கள் கொடுத்தது அடி இல்லை இடி.. ஸ்பீக்கர் பாக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்சென்சூர் தான் டாப்பு..!
 

அக்சென்சூர் தான் டாப்பு..!

2015-16ஆம் நிதியாண்டில் பெங்களூரில் அதிக வேலை வாய்ப்பைக் கொடுத்துள்ளது அக்சென்சூர் நிறுவனம் தான். எப்படி..?

2015-16ஆம் நிதியாண்டில் ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் செலுத்தப்படும் ப்ரொபஷ்னல் வரியில் அதிகத் தொகை செலுத்தியது அக்சென்சூர் தான். இதன் மூலம் பெங்களுரூ நகரத்தில் அதிக வேலைவாய்ப்பை வழங்கியது அக்சென்சூர் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பெங்களூர் நகரத்தில் அதிக ப்ரொபஷ்னல் வரி செலுத்திய டாப் 10 பட்டியலில் அக்சென்சூர் (12.23 கோடி ரூபாய்), ஐபிஎம், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, சிடிஎஸ், பிஎஸ்என்எல், ஆரக்கிள், எச்பி, கேப்ஜெமினி (3.44 கோடி ரூபாய்) ஆகியவை இடம் பெற்றுள்ளது.

#Accenture #Tax

தீபாவளி ஸ்பெஷல்: சீனாவிற்கு இந்தியர்கள் கொடுத்தது அடி இல்லை இடி..

தீபாவளி ஸ்பெஷல்: சீனாவிற்கு இந்தியர்கள் கொடுத்தது அடி இல்லை இடி..

கடந்த சில வாரங்களாக இந்திய வியாபாரிகள் மற்றும் மக்கள் சீன பொருட்களை வாங்கவும் விற்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டும் இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

#Diwali #ChinaBan

எங்களுடைய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய கிளிக்ங்கோ..!

பேஸ்புக் மூலம் கடன்..!

பேஸ்புக் மூலம் கடன்..!

CASHe என்னும் மொபைல் செயலியில் உங்கள் சேஷியல் ப்ரொபைல் பார்த்து உங்களுக்குக் கடன் வழங்குகிறது. இது மோசமான கிரேடிட் ஸ்கோர் கொண்ட அனைவருக்கும் பம்பர் ஆஃபர்.

ஆனால் CASHe செயலி சில முக்கியத் தகவல்கள் கொடுக்க வேண்டி இருக்கும். பயன்படுத்திப் பாருங்களேன்.

#CASHe #Loan #Facebook

7 நாட்களுக்குள் செட்டில்மென்ட்
 

7 நாட்களுக்குள் செட்டில்மென்ட்

பிரதமர் நரேந்திர மோடி ஊழியர்களுக்கு வழங்கும் மோசமான சேமநல சேவைக் குறித்துத் தொழிலாளர் அமைச்சகத்தைக் கண்டித்ததை அடுத்து, இனி இறந்தவர்களுக்குப் பிஎப் தொகை கோரும் போதும் வெறும் 7 நாட்களில் முழுமையான தொகையைச் செட்டில் செய்யப்படும் என EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் ஓய்வுபெறும் ஊழியர்களுக்குத் தங்களது கடைசி வேலை நாட்களுக்குள் அனைத்துத் தொகையும் செட்டில் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

#EPFO #PF

ஊழியர்களுக்குப் பாதுகாப்பின்மை

ஊழியர்களுக்குப் பாதுகாப்பின்மை

உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவில் 95.3 தற்காலிக ஊழியர்கள், 67.8 ஒப்பந்த ஊழியர்கள், 64.9 சதவீத இயல்பான ஊழியர்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

95.3% தற்காலிக ஊழியர்களில் 59.3 சதவீதம் பேருக்கு மாதம் 5,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியாவில் ஊழியர்களுக்குத் தங்களது வேலையில் அதிகளவிலான பாதுகாப்பின்மை உள்ளது தெரியவந்துள்ளது.

#Job #Insecurity

இனி ஐஐடி பாம்பே கல்லூரியில் சுத்தத்தை எதிர்பார்க்கக் கூடாது..!

இனி ஐஐடி பாம்பே கல்லூரியில் சுத்தத்தை எதிர்பார்க்கக் கூடாது..!

நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி பாம்பே தனது பட்ஜெட் நெருக்கடிக்காக இனி டாய்லெட் ஹேண்ட்வாஷ் பயன்படுத்துவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைக்க விடுதி அறைகள் மற்றும் கழிவறைகள் கூடச் சுத்தம் செய்யும் பணிகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

#IITB #Bombay #Budget

22 மாத உயர்வில் உற்பத்தித் துறை..

22 மாத உயர்வில் உற்பத்தித் துறை..

இந்தியாவில் கடந்த 22 மாதங்களாகத் தொழிற்துறை உற்பத்தி அளவுகள் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு, புதிய ஆர்டர்கள், ஆகியவை ஆகும்.

இந்நிலையில் அக்டோபர் மாதம் உற்பத்தி PMI அளவுகள் 54.4 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் இதன் அளவுகள் 52.1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#Manufacturing #PMI

5 வாரச் சரிவில் மீண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

5 வாரச் சரிவில் மீண்டு கச்சா எண்ணெய் விலை உயர்வு..!

தென் நைஜீரியா பகுதியில் இருக்கும் டெல்டா எண்ணெய் தளத்தில் அந்நாட்டுப் போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதால், இப்பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 5 வாரச் சரிவில் இருந்து மீண்டுள்ளது.

இன்றைய வர்த்தகப் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 51 சென்ட் உயர்ந்து 47.37 டாலராகவும், யுஎஸ் க்ரூடு 39 பைசா உயர்ந்து 45.73 டாலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் இன்றைய விலை உயர்விற்கு டாலர் மதிப்பின் சரிவு காரணம்.

#Nigeria #Oil

மத்திய அரசுடன் லிங்கின்இன் ஒப்பந்தம்..!

மத்திய அரசுடன் லிங்கின்இன் ஒப்பந்தம்..!

இந்திய மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்குடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மைக்ரோசாப்ட் கைப்பற்றிய உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு வலை அமைப்பான லிங்கின்இன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அரசு அனுமதி பெற்றுள்ள அனைத்துக் கல்லூரிகளும் லிங்கின்இன் உருவாக்கியுள்ள பிரத்தியேக சேவையைப் பயன்படுத்த உள்ளது.

#HRD_Ministry #LinkedIn #Microsoft

விற்பனையில் 22% உயர்வு: மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா..!

விற்பனையில் 22% உயர்வு: மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா..!

யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 86,428 வாகனங்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதன் அளவு 70,812ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் யமஹா 2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் விற்பனை சுமார் 22 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

#Yamaha #Sales

2 வருட உயர்வில் சீன உற்பத்தி குறியீடு..!

2 வருட உயர்வில் சீன உற்பத்தி குறியீடு..!

கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் மிகப்பெரிய அளவிலான தொய்வை கண்ட சீன அக்டோபர் மாதத்தில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

கடந்த 2 வருடமாக மோசமான நிலையில் இருந்த சீன நாட்டின் உற்பத்தி PMI குறியீட்டின் அளவு அக்டோபர் மாதத்தில் 51.2 ஆக உயர்ந்துள்ளது எனத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியில் உள்ளது என்பது பொருள்.

#Manufacturing #China #PMI #NBS

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds - GoodReturns-Tamil - 03112016

News in 30 seconds - GoodReturns-Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X