ஹிலாரி கிளின்டன் / டொனால்டு டிரம்ப்..? இந்திய மக்களின் ஆதரவு யாருக்கு தெரியுமா..? #USelection

இந்திய மக்களுக்கு டொனால்டு டிரம்ப் மீது இவ்வளவு வெறுப்பா..?

சென்னை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2 முறை அதிபர் பதவியில் பணியாற்றியதால், இனி அவரால் போடியிட முடியாது. இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு கருப்பு இன அமெரிக்க அதிபர் ஆவது அதுவே முதல் முறையாக இருந்தது. அடுத்தத் தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார் பிராக் ஓபாமா.

இந்நிலையில் ஒபாமாவின் பணிக்காலம் முடிவடைவதால் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகமும் முழுவதும் எழுந்துள்ளது. காரணம் தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள்.

செவ்வாய்க்கிழமை அதாவது நாளை அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றித் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாக்கெடுப்பு நடத்தியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய இதை கிளிக்ங்கோ..!

போட்டி

போட்டி

நவம்பர் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் Democratic கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், Republican கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் ஆட்சியில் இருப்பது Democratic கட்சி.

 

 திமுக- அதிமுக

திமுக- அதிமுக

தமிழ்நாட்டில் திமுக- அதிமுக என்ற இரு சக்திவாய்ந்த கட்சிகள் இருப்பது போல் அமெரிக்காவிலும் Democratic மற்றும் Republican கட்சிகள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் டபிள்யு.புஷ் கட்சி சார்பில் தற்போது அதிபர் தேர்தல் களத்தில் டொனால்டு டிரம்ப் இறங்கியுள்ளார்.

டிரம் பெண்கள் குறித்துப் பேசிய கருத்துக்கள் மூலம் அமெரிக்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வெறுப்பைச் சம்பாதித்தார். ஆனால் இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிடம் அமெரிக்கப் பறிகொடுத்த வேலைவாய்ப்புகள் பரிந்து அமெரிக்க மக்களிடம் திருப்ப கொடுக்கப்படும் எனக் கூறினார் டொனால்டு டிரம்ப். இதனால் தொடர்ந்து தனது ஆதரவாளர்களைச் சேர்ந்து வருகிறார் டிரம்ப்.

 

 

ஹிலாரி கிளிண்டன்

ஹிலாரி கிளிண்டன்

பில் கிளிண்ட்ன், பராக் ஒபாமா வரிசையில் Democratic கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் நாளை நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பராக் ஒபாமா தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஒபாமாகேர் மூலம் மருத்து சேவை, உலகை நடுங்கவைத்த தீவிரவாதி ஓசாமா பின்லேடனை கொன்றது என் அமெரிக்க மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரின் வரிசையில் தற்போது ஹிலாரி கிளிண்டன் வருகிறார். ஆனால்..

 

எப்பிஐ வழக்கு..

எப்பிஐ வழக்கு..

சில நாட்களுக்கு முன் அதிபர் வேட்பாளர்கள் மத்தியில் நடந்த நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஹிலாரி கிளிண்டன் ஈமெயில் குறித்த வழக்கை எப்பிஐ ஏற்க மறுக்கிறது என டிரம்ப் மிகப்பெரிய குண்டை தூக்கிப்போட்டார். இது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போது ஹிலாரி கிளிண்டன் அனுப்பிய மின்னஞ்சல்களில் தவறு கூறும்படியான எந்த விதமான செய்திகளும் இல்லை என எப்பிஐ தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில்..

இந்தியாவில்..

ஹிலாரி கிளிண்டன் - டொனால்டு டிரம் பற்றித் தொடர்ந்து வாக்குக் கணிப்புகள் நடந்து வந்தாலும் இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் யாருக்கும் அதிகளவிலான ஆதரவு அளிக்கிறார்கள் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தினோம்.

காரணம் இந்தியாவில் டிரம்ப்-க்கு எதிராகப் பல இளைஞர்கள் பட்டாளம் திரண்டுள்ளது.

 

வாக்கெடுப்பு..

வாக்கெடுப்பு..

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கடந்த 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் - டொனால்டு டிரம்ப் இவர்களில் யார் வெற்றிபெற வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

ஹிலாரி கிளிண்டன்-க்கு ஆதரவு

ஹிலாரி கிளிண்டன்-க்கு ஆதரவு

வாசகர்களின் 3,212 வாக்குகளில், 74 சதவீத மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவும் அளித்துள்ளனர். இதில் வெறும் 830 பேர் அதாவது 26 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உங்கள் அதரவை அளிக்க விரும்பினால் இதை கிளிக் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+